மதமாற்ற வேலைகளில் ஈடுபட்டு வரும் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து அட்டூழியங்களை செய்து வருகிறார்கள் நமது இந்து பண்டிகைகளை அவர்கள் பண்டிகை போல மக்கள் மனதில் மடைமாற்றி நமது விழாக்களை மறக்கடிப்பதற்காக கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்த மக்களை திரும்பவும் விநாயகர் சதுர்த்தி மூலம் திரும்பி விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்
கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட ஜெப யாத்திரையின் விளைவால் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக கோவை செயின்ட் பால் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அடித்து அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு வழங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பை காரணம் காட்டி இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வணங்குவதற்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது.
ஆனால், இந்த தடை அறிவிக்கப்படுவதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி , கிறிஸ்துவர்களுக்கு கோவை, செயின்ட் பால் கல்லுாரி சார்பில், அதன் தலைவர் டேவிட் கடிதம் அனுப்பி உள்ளார். அவை, கல்லூரி பெயருடன் பிட் நோட்டீஸ்களாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
அந்த நோட்டிஸில் “கடந்த மூன்று ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி அன்று கோவையில் சிறப்பு ஜெப யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது விநாயகர் சதுர்த்தி நாளன்று அல்லது விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாளோ அல்லது இரண்டு நாள் முன்னதாகவே கோவை மாவட்டத்தில் உள்ள 100 வார்டுகளிலும் சபையாக குழுவாக அல்லது குடும்பமாக வாகனத்தில் அமர்ந்து கொண்டு ஜெப யாத்திரையில் ஈடுபட வேண்டும்” என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 2017ஆம் ஆண்டு 200 வாகனங்களில் யாத்திரை சென்றதாகவும் 2018ஆம் ஆண்டு 1000 வாகனங்களில் யாத்திரை சென்று ஜெபித்ததாகவும் 2019ஆம் ஆண்டு இதே போல் யாத்திரை நடைபெற்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி மூன்று ஆண்டுகள் ஜெப யாத்திரை நடத்தியதன் விளைவாக கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அனுமதி இல்லாமல் விநாயகர் சிலையை வெளியே கொண்டு வரக்கூடாது என்றும் சிறிய அளவிலான விநாயகர் சிலைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அதேபோல் ஒரு குறிப்பிட்ட வழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிலையை கரைத்துவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தாங்கள் செய்த ஜெப யாத்திரையின் விளைவுதான் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிட் நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டேவிட் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என ஹிந்து முன்னணி கோரிக்கை விடுத்து உள்ளது.இது தொடர்பாக கோவை வடக்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், கோவை மாவட்ட பொறுப்பாளர் பாலன், பொதுச்செயலர் தியாகராஜன், செய்திதொடர்பாளர் ஜெய்கார்த்தி உள்ளிட்ட 100 பேர், துடியலூர் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு இன்ஸ்பெக்டர் ஞானசேகரிடம் புகார் அளித்தனர். அதற்கு இன்ஸ்பெக்டர், நேற்று நேற்று மாலைக்குள் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு, டேவிட் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
பின்னர் பாலன் கூறியதாவது: டேவிட் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்யப்படவில்லை என்றால், மேட்டுப்பாளையம் ரோட்டில் ஞானம்பிகா மில்ஸ் பிரிவில் ஹிந்து முன்னணி தொண்டர்கள் 5 ஆயிரம் பேர் திரண்டு சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மதபோதகர் டேவிட் கைது கைது செய்யப்பட்டார்.