இந்த உலகில் எந்த ஒரு செயலும் ஏற்க னவே ஆண்டவனால் தீர்மானிக்கப்பட்ட விதியின் படியே நடைபெறுகிறது என்ப து என்னைப்போன்ற கடவுள் நம்பிக்கை யாளர்களின் கருத்து.
அது ரஜினியின் அரசியல் பிரவேசத்திலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
அதிமுகவில் ஓபிஎஸ் கை ஓங்குகிறது என்றவுடன் ஓபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளரா?
என்று கேட்பது அபத்தமானது அதிமுகவில் எடப்பாடியின் கண்ட்ரோல் டம்மியாகி ஓபிஎஸ்கை ஓங்குகிறது என்பது தான் அர்த்தம்.
அதிமுகவில் ஓபிஎஸ் கை ஓங்கிவிட்டால் ஓபிஎஸ் தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்று அதிமுக அறிவித்து விடுமா?
கட்சி தலைமை வேறு தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் தலைலை வேறு என்பதை மட்டும் நினைத்து கொ ள்ளுங்கள்.
இப்பொழுது பிஜேபி தலைவராக நட்டாவை அடுத்த பிரதம வேட்பாளர் என்று பிஜேபி அறிவித்து விடுமா? நட்டா தலைமையில் பிஜேபி ஜெயித்து விடுமா?
என்று நீங்கள் யோசித்தால் ஓபிஎஸ் தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்
என்று யோசிக்க மாட்டீர்கள்.
ஓபிஎஸ் எடப்பாடி இவர்களை யெல்லாம் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டு அந்த கூட்டணியை வழி நடத்தி
செல்ல பிஜேபியில் உள்ளவர்கள் ஒன்று ம் முட்டாள்கள்.
அல்ல பிஜேபிக்கு வலுவான அடித்தளம் உடைய மாநிலங்களிலேயே பக்காவாக பிளான் போட்டு தேர்தலை சந்திக்கும் பிஜேபி அடித்தளமே இல்லாத தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க எந்த அளவிற்கு சிந்திக்கும் என்று பொறுத்து இருந்து பாருங்கள்..
உங்களுக்கும் எனக்கும் பிடித்து இருக்கிறதோ இல்லையோ..
இப்போதைய அரசியல் களத்தில் ரஜினி தான் மக்களி டம் நன்கு அறிமுகமான பவர்புல் அரசிய ல்வாதி.
இந்த பவர்புல் அரசியல்வாதியை அருகில் வைத்துக்கொண்டு பிஜேபி-அதிமுக கூட்டணிக்கு ஓபிஎஸ் எடப்பாடி மாதிரி ஆட்களை முதல்வர் வேட்பாளராக பிஜேபி நிறுத்தும் என்று நினைப்பது
சிறு பிள்ளைத்தனமானது.
ரஜினியின் அரசியல் என்பது அதிமுகவை சார்ந்தே அமையும் என்பதே என்னுடைய கருத்து.
இதற்கான ஒத்திகை கடந்த
2018 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முன்னாள் அதிமுக அமைச்சரும் புதிய நீதிக்கட்சியின் தலைவருமான ஏ.சி சண்முகத்தின் காலேஜில் எம்ஜியார் சிலையை திறந்துவைத்த பொழுதே ஆரம்பமாகிவிட்டது.
அப்பொழுது ரஜினி பேசியது இப்பொழுதும் நினைவில் நிற்கிறது.
அரசியலுக்கு யார் வந்தாலும், யாரும் எம்ஜிஆராக முடியாது. அவர் ஒரு தெய்வப்பிறவி. அவர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது.
எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் என்றார்.
வழக்கமாக என்னுடைய வழி தனி வழி என்று வசனம் பேசும் ரஜினி அப்பொழு து தான் என் வழி எம்ஜிஆர் வழி என்று முதன் முதலாக வாய் திறந்தார்.
அதோடு கருணாநிதியை மட்டுமே சிறந்த தலை வராக போற்றி வந்த ரஜினி முதன்முதலாக எம்ஜிஆர் மாதிரி ஒரு சிறந்த தலைவர் கிடையாது என்று ரூட் மாற ஆரம்பித்தார்.
அந்த காலகட்டத்தில் கருணாநிதி மரணப்படுக்கையில் இருந்தார்.அன்றிலிருந்து தான் திமுக ரஜினியை எதிரியாக நினைத்து வசை பாட ஆரம்பித்தது.
அப்பொழுதே ரஜினியின் அரசியல் ரூட் அதி முகவாகத்தான் இருக்க முடியும் என்று கூறிவருகிறேன்.
இதற்கு காரணமும் இருக்கிறது.
ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்க கமல் மாதிரி முட்டாள் அல்ல.மிக சிறந்த அரசியல் ஞானம் உள்ளவர்.
1996லிலேயே தனிக்கட்சி அரசியலை தவிர்த்து அப்பொழுது எதிரியாக இருந்த ஜெயலலிதாவை வீழ்த்த திமுகவை பயன்படு த்தி சிறந்த கூட்டணி அமைத்த ரஜினி இப்போதைய எதிரியான திமுகவை வீழ்த்த அதிமுகவையே பயன் படுத்தி கொள்வார்.
ஏனென்றால் அதிமுகவை விட்டு ரஜினி தனியாக திமுக எதிர்ப்பு அரசியலை எடுத்து சென்றால் அதிமுக பிஜேபி ஆதரவு வாக்குகள் சிதைந்து அதன் பயனாக திமுக ஆட்சிக்கு வரவே வழி வகுக்கும்.
ஏற்கனவே திமுக ஆதரவு வாக்குகளை சிதைக்க பிளான் போட்டு அரசியல் செய்து வரும் பிஜேபி ரஜினியை தனிக்கட்சி
ஆரம்பிக்க வைத்து பிஜேபி அதிமுக ஆதரவு வாக்குகள் சிதைய விட்டு விடுமா?
ரஜினி அரசியல் ரீதியாக வெற்றி பெற பிஜேபியை விட அதிமுக தான் கட்டாயம் வேண்டும். அதே மாதிரி அதிமுகவுக்கு வருகின்ற தேர்தலில் திமுகவை தோற்க டிக்கரஜினி மாதிரி பாப்புலர் லீடர் தான் தேவை.
ரஜினிக்கு அரசியல் கட்டமைப்பு
இல்லை. அது அதிமுகவிடம் இருக்கிறது
அதிமுகவில் மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள் நகராட்சிகள் டவுன் பஞ் சாய்த்துகள் கிராம பஞ்சாயத்துகள் என்று அனைத்திலும் ஸ்ட்ராங்கான அடித்
தளம் இருக்கிறது. ஆனால் இதை வழிநடத்த ஒரு ஸ்ட்ராங்கான மக்கள் விரும்பு ம் லீடர் இல்லை.
ஆக எம்ஜிஆர் ஜெயலலிதா என்று திரைப்பட நட்சத்திரங்களாலே மக்களிடம் அடையாளம் காட்டப்பட்டு வந்த அதிமுகவை. ரஜினி என்கிற திரைப்பட நடிகர் மூலமாகவே மக்களிடம் கொண்டு செல்வதே சிறந்த அரசியலாக இருக்க முடியும்.
அதிமுகவை விட்டு துரத்தப்பட்ட சாதாரண ஒபிஎஸ் அவர்களையே அதிமுகவின் நம்பர்-1 இடத்திற்கு கொண்டு வந்த பிஜே பியால் மக்கள் செல்வாக்கு கொண்ட ரஜினியை பிஜேபி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக கொண்டு வர முடியாதா?
நிச்சயமாக முடியும்.உடனே அதிமுகவில் ரஜினியா? என்று நிறைய பேர் சிரிக்கலாம்.
வருகின்ற செய்திகள் எல்லாம் அதிமுக ரஜினியை நோக்கியே சென்று கொ ண்டு இருக்கிறது என்பதையே உணர்த்தி வருகின்றன. இதுதான் தமிழக அரசியலை கைப்பற்ற பிஜேபி வைத்து இருக்கும் மாஸ்டர் பிளான்
இன்னும் சில மாதங்களில் ரஜினிக்கு அதிமுகவில் இருந்தே வாருங்கள் திமுக வை வீழ்த்த இணைந்து பணியாற்றுவோம் என்று அழைப்பு வரலாம்.
அந்த அழைப்பை ஏற்று ரஜினியும் அதிமுக பிஜேபி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்படுவார் என்று எதிர்பா ர்க்கலாம்
அதனால் திமுக எதிர்ப்பு ஒன்றையே ஒரே கொள்கையாக முன் வைத்து திமுக எதிர்ப்பு சக்திகளை ஒன்றிணைத்து அதற்கு எம்ஜியார் உருவாக்கிய கட்சியையே தலைமை தாங்க வைத்து அதை ரஜினி யே வழிநடத்தி சென்று 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தி தமிழகத்தில் திராவிட அரசியலை முடித்து வை த்து ஆன்மீக ஆட்சியை மலர வைப்பார்
ஒவ்வொரு காலத்திலும் இந்த அரசியல் வெற்றி பெற வேண்டும் இவர் மூலமாக அது வெற்றி பெற வேண்டும் என்று தீர்மானிப்பது ஓட்டுப்போடும் நீங்களும் நானு ம் அல்ல.
நம்மை ஆண்டவர்களால் தான் தீர்மானிக்கப்படுகிறது.
2016 டிசம்பர் 5 ம் தேதி ஜெயலலிதா இற ந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்ட தில் இருந்து 2017 பிப்ரவரி் 14 ம் தேதி வரை
சசிகலா எந்த நேரத்திலும் தமிழக முதல்வராவார் என்றே அனைவரும் நினைத்து இருந்தார்கள்.
சசிகலாவும் முதல்வர் கனவில் தான் ஜெயலலிதா கெட்டப்பில் வலம் வந்து கொண்டு இருந்தார்.
ஆனால் பிப்ரவரி 15ம் தேதி உச்சநீதிமன் தீர்ப்புப்படி பரப்பன அக்ரஹார சிறையில் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் எடப்பாடி தமிழக முதல்வராவார் என்றும் யாருமே எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள்.
ஆனால் ஆண்டவன் கட்டளைப்படி
யே அது நடந்தது.
அதே மாதிரி அடுத்த தமிழக முதல்வரும் அதிமுகவில் இருந்தே அதுவும் திரைத்துறையை சேர்ந்த ரஜினியே இருப்பார் என்பதும் ஆண்டவன் கட்டளையாக இரு
த்தால் அதை யாராலும் மாற்ற முடியாது.
கட்டுரை:- வலதுசாரி எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.