தமிழகத்தில் தி.மு.க. – அ.தி.மு.க.வுக்கு போட்டியாக வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டத்தால் பா.ஜ.வுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளதாக மாநில உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது..
தமிழகத்தில் தாமரையை மலர வைத்தே தீருவோம் என பாஜக உறுதி பூண்டுள்ளது. இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பலனில்லாமல் இருந்தது.
ஆனால், தமிழகத்தில் வேல் யாத்திரை அதற்கு பலன் அளித்துள்ளது.
முன்பெல்லாம் பாஜக கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தினால் 20 அல்லது 30 பேர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். ஆனால் இப்போது கூட்டம் ஆயிரக்கணக்கில் கூடுகிறது.
கடந்த 6ம் தேதி திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்கிய நிலையில் மாநிலத்தலைவர் முருகன் கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து தமிழகம் முழுதும் பா.ஜ.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
கடந்த காலத்தில் பா.ஜ. பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் 500 பேர் வந்தாலே ஆச்சர்யமாக பார்க்கப்படும்.
ஆனால் வேல் யாத்திரை பொதுக்கூட்டங்கள் நடந்த விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி, சேலத்தில் சராசரியாக 1000 பேர் முதல் 10,000 பேர் வரை பங்கேற்று 500 பேர் முதல் 1000 பேர் வரை கைதாகினர்.
கூட்டம் கூடியதன் பின்னணி குறித்து உளவுதுறை மதம் சார்ந்த குற்றத்தடுப்பு நுண்ணறிவு கியூ பிரிவு, மாநகர நுண்ணறிவு மாவட்ட எஸ்.பி.சி.ஐ.டி. ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஆகியவற்றின் அறிக்கைகளை ஒருங்கிணைத்து உளவுத்துறை உயரதிகாரிகள் அரசின் பார்வைக்கு அளித்த அறிக்கையில் ….
இந்து அமைப்புகள் தொடங்கிய 20:20 எனும் திட்டத்தால் பா.ஜ.வின் வேல் யாத்திரைக்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த கூட்டங்களில் பா.ஜ.க நிர்வாகிகள் மட்டுமின்றி இந்து அமைப்பு நிர்வாகிகள், கோவில்களில் பூஜை நடத்துபவர்கள், மற்றும் நன்கு படித்தவர்கள் அதிக அளவில் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தால் பா.ஜ.வில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இதனால், இதுவரை தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் சில மாவட்டங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் மட்டும் பா.ஜ.க பிரதிநிதிகள் முகவர்களாக இருந்தனர்.
வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் பா.ஜ.க சார்பில் முகவர்கள் இடம்பெற நிர்வாகிகள் தயார் செய்து உள்ளனர்.
பா.ஜ.வுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளதாக மாநில உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது..
சட்டசபை தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ஜ.க முக்கிய இடத்தை பெறும்” என உளவுத்துறை உயரதிகாரிகள் அரசின் பார்வைக்கு அளித்த அறிக்கையில், தெரிவித்துள்ளனர்.