மக்களவை தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. பெரும்பாலும் ஏப்ரல் இறுதியிலும் -மே முதல்வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளுக்கும் தயாராகி வரும் நிலையில் பாஜக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளில் தீவிரம் செலுத்தி வருகிறது. மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் 370 இடங்களை பிடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறது பா.ஜ.க.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக வேட்பாளர்களை பட்டியலை வெளியிட பா.ஜனதா தீர்மானித்தது. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவின் மத்திய தேர்தல் கமிட்டி நேற்று முன்தினம் கூடியது இந்த கூட்டத்தில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தியது.இரவு 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்றுள்ளது
இந்த நிலையில் 195 வேட்பாளர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. வாரணாசியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளார் ! காந்தி நகரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிடுகிறார். 34 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழகம் இல்லை.
உத்திரபிரேதசம் 51 தொகுதி
மேற்கு வங்கத்தில் 26 தொகுதி
மத்தியபிரேதேசம் 24 தொகுதி
தெலுங்கானாவில் 9 தொகுதி
குஜராத்தில் 15 தொகுதி
ராஜஸ்தானில் 15 தொகுதி
கேரளாவில் 12 தொகுதி
ஜார்க்கண்ட் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 11 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
50 வயதிற்கு உட்பட்ட 47 பேர் போட்டியிடுகிறார்கள்
28 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்
பட்டிலினத்தை 27 பேர் பழங்குடியினத்தை சேர்ந்த 18 பேர் போட்டியிடுகிறார்கள்
பிற்படுத்தப்பட்டவகுப்பை சேர்ந்த 57 பேர் போட்டியிடுகிறார்கள்
The BJP’s first list is out. 195 in all. UP (51) Bengal (20) MP (24) Gujarat (15) Rajasthan (15) Kerala (12) Telangana (9) Assam (11) Jharkhand (11) Chattisgarh (11) Delhi (5) Jammu & Kashmir (2) Uttarakhand (3) Arunachal Pradesh (2) Goa (1) Tripura (1) Andaman & Nicobar (1) Daman Diu (1) PM Modi to contest from Varanasi. 34 ministers and MoS named in the list. 2 former CMs. 28 women. 47 youth. 27 SC candidates. 18 ST 57 OBCs