68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்து விட்டதாக ‘ பொய் செய்தி’ வெளியிட்ட தினகரன், தினத்தந்தி , one india ஆகிய செய்தி நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன்.
புகார்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது . புகார்களின் ஒட்டுமொத்த சாராம்சம் :
அனுப்புதல்:
அ.அஸ்வத்தாமன்,
மாநில செயலாளர் – வழக்கறிஞர் பிரிவு ,
பாரதிய ஜனதா கட்சி,
T1, Singapore plaza,
Lingi chetty st,
Parrys.
- பெறுதல்:
உயர்திரு. காவல்துறை ஆணையர்,
சென்னை.
பொருள்: வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்தல், தேசத்திற்க்கு எதிரான பொய்யான செய்திகளை வெளியிடுதல், பொய்யான அவதூறான தீங்கிழைக்கும் வகையிலான பொய் செய்திகளை வெளியிடுதல் அச்சிடுதல் பொதுமக்களுக்கு விற்றல், இந்திய நாட்டின் பெருமையை சீர்குலைக்கும் வகையிலான பொய்யான ஆவணங்களை தயாரித்தல், பொய்யான ஆவணங்களை சரியான ஆவணங்கள் போன்று வெளிகாட்டுதல், அரசிற்கு எதிராக வெறுப்பணர்வை தூண்டுதல் , வேண்டுமென்றே அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஆணைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் கூட்டாக சேர்ந்து செயல்படுதல் , இணையதளத்தில் அவதூறான ஜோடிக்கப்பட்ட தீங்கு இழைக்கக் கூடிய பொய்யான ஆவணங்களை பதிவேற்றுதல் ,அவற்றை பொதுவெளிக்கு காட்சிப்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக தினதந்தி மற்றும் www.dailythanthi.com , tamil.oneindia.com, www.dinakaran.com மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் .
மேற்புறம் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி நிறுவனம் 29.04.2020 தேதியிட்ட தின தந்தி நாளிதழ் மற்றும் அதன் இணையதள பக்கம் (https://www.dailythanthi.com/News/India/2020/04/29034046/Nirav-Modi-Vijay-Mallya-Rs-68-crore-including-the.vpf. ) மற்றும் மேற் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள பக்கம் (https://tamil.oneindia.com/news/chennai/questions-over-rbi-writes-off-nearly-rs-70-000-for-50-defaulters-383973.htmlhttps://tamil.oneindia.com/news/chennai/questions-over-rbi-writes-off-nearly-rs-70-000-for-50-defaulters-383973 மற்றும் https://tamil.oneindia.com/news/delhi/rbi-said-loans-worth-rs-68-000cr-written-off-wilful-defaulters-include-vijay-mallya-choksi-383966 ) மற்றும்மேற்புறம் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி நிறுவனம் 29.04.2020 தேதியிட்ட தினகரன் நாளிதழ் மற்றும் அதன் இணையதள பக்கம் ( http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=581908 ) ஆகியவற்றில் 50 தொழிலதிபர்களின் 68 ஆயிரத்து 670 கோடி கடன் தள்ளுபடி என்று ரிசர்வ் வங்கி தகவல் தந்ததாக ஒரு பொய்யான ஜோடிக்கப்பட்ட அவதூறான தீங்கிழைக்கக் கூடிய செய்தியை வேண்டுமென்றே பிரசுரித்துள்ளார்கள் .
மேற்கண்ட 50 தொழிலதிபர்களின் கடன்கள் ‘சாதாரண முறையில் வசூலாகாத கடன்கள் பட்டியலில் (write off) சேர்க்கப்பட்டுள்ளது ‘ என்ற தகவல்தான் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது.
இந்த செய்தியை , கடனை தள்ளுபடி செய்து விட்டதாக வேண்டுமென்று பொய்யாக திரித்து ஆவணமாக தயாரித்து, அதை சரியான ஆவணம் போன்று வெளிப்படுத்தி அவதூறான கொச்சையான ஒரு செய்தியை பதிவு செய்துள்ளார்கள். கோரானாவால் உலகமே பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் போது ,நமது தேசத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் மக்களிடம் தேசத்திற்க்கு எதிராக வெறுப்புணர்வு பகை உணர்வு ஆகியவற்றை வேண்டுமென்றே தூண்டி அதன் மூலம் பொது அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தில் திட்டமிட்டு கூட்டாக இது செய்யப்பட்டுள்ளது.
‘Write off’ என்பதை கடன் தள்ளுபடி செய்து விட்டதாக சுய அறிவு உள்ள எந்த ஒரு மனிதனும் தவறாக புரிந்து கொள்ள எந்தவித முகாந்திரமும் இல்லாத பட்சத்தில் , இது வேண்டுமென்றே திட்டமிட்டு மக்களிடம் வெறுப்புணர்வை தூண்டி பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தோடு ஆவணங்களை திரித்து பொய் செய்தியை ,அவதூறு செய்தியை வெளியிடும் தீய நோக்கத்தோடு இது செய்யப்பட்டுள்ளது.
ஆகவே , மேற்கூறப்பட்ட செய்தியை வெளியிட்ட நிருபர் ,அந்த செய்தி நிறுவனத்தின் தலைமை நிருபர் ,வெளியீட்டாளர் உரிமையாளர் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499, 501,502,469,471,504,153(a), 188 read with 34 IPC , மற்றும் IT ACT 66(a) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கடிதம் :- அ.அஸ்வத்தாமன்
பாரதிய ஜனதா கட்சி,