பா.ஜ.க-வின் முழக்கம், ‘இம்முறை 370 தொகுதிகளை வெல்வோம்’ என்று ஆரம்பித்தது. அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு காஷ்மீருக்கு வழங்கிய சிறப்புச் சலுகைகளை நீக்கியதன் குறியீடு அந்த எண். பிறகு பிரதமர் நரேந்திர மோடியே அதை 400 என்ற எண்ணிக்கைக்கு உயர்த்தினார்.கடந்த 2014 தேர்தலில் பா.ஜ.க 282 இடங்களில் வென்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 336 எம்.பி-க்கள் கிடைத்தனர். 2019 தேர்தலில் பா.ஜ.க-வுக்கு மட்டுமே 303 எம்.பி-க்கள் கிடைத்தார்கள். கூட்டணி மொத்தமாக 352 தொகுதிகளைக் கைப்பற்றியது. அப்போது பா.ஜ.க கூட்டணிக்குக் கிடைத்த வாக்குகள் 45%. ஆகும்.
கடந்த 1984 தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையில் காங்கிரஸ் 414 தொகுதிகளை வென்றது. இப்போதுவரை இந்தியாவில் 400 என்ற மேஜிக் எண்ணை ஒரு கட்சி தாண்டிய நிகழ்வு அதுதான். அப்போது 48% வாக்குகளை காங்கிரஸ் வாங்கியது. அந்த வாக்கு சதவிகிதத்தை பா.ஜ.க கூட்டணி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட ஆரம்பித்துள்ளது. மூன்றாவது முறையும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால், நேருவுக்குப் பிறகு இந்தியாவை மூன்று முறை தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆளும் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுவார். அதற்கான வேளைகளில் தான் பாஜக முழுமையாக இறங்கி வேலை செய்கிறது.
இந்தத் தேர்தலை இந்தியாவை நான்குவிதமாகப் பிரித்துப் பார்த்து பா.ஜ.க அணுகுகிறது. முதல் ஏரியா, பா.ஜ.க செல்வாக்காக இருக்கும் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள். இங்கெல்லாம் 2019 வெற்றியில் ஒரு தொகுதிகூடக் குறைந்துவிடக்கூடாது என்பது அவர்கள் இலக்கு.தங்கள் வெற்றியை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய மாநிலங்கள் என பா.ஜ.க கருதும் பகுதிகள். உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, தெலங்கானா, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் இந்தப் பிரிவில் வருகின்றன. உ.பி-யில் 80 இடங்களில் கடந்த முறை 64 பா.ஜ.க வசம் வந்தது. 2019-ல் 10 இடங்களில் ஜெயித்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இம்முறை செல்லரித்துப் போயிருக்க, அந்த இடங்களையும் வசப்படுத்த முயல்கிறது பா.ஜ.க.
மேற்கு வங்காளத்தில் 42 இடங்களில் 18 தொகுதிகளை பா.ஜ.க போனமுறை வென்றது. இந்தமுறை 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேலை செய்து வருகிறது. மேலும் கண்டிப்பாக 25தொகுதிகளுக்கு மேல் பாஜகவின் வெற்றி உறுதி என உளவுத்துறை ரிப்போர்ட் கூறியுள்ளதால் பாஜக மேலிடம் செம்ம ஹாப்பி. தெலங்கானாவின் 17 தொகுதிகளில் கடந்த முறை பா.ஜ.க-வுக்கு 4 கிடைத்தது. மேலும் இந்தமுறை வலுவாக பாஜக அங்கு காலூன்றியிருப்பதால் 4 தொகுதிகளை இரட்டிப்பாக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
வடகிழக்கில் 25 தொகுதிகளில் கடந்த முறை பா.ஜ.க-வுக்கு 15 கிடைத்தது. இம்முறை இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முழுமுயற்சி மேற்கொண்டு 20க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் என உளவுத்துறை கூறியுள்ளது.
மேலும் பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள். பீகாரின் 40 தொகுதிகளில் கடந்த முறை 39 இடங்களை பா.ஜ.க கூட்டணி வென்றது. இம்முறையும் அதேபோல நிதிஷ், சிராக் பஸ்வான், ஜிதன்ராம் மஞ்சி, உபேந்திர குஷ்வாஹா கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் களம் காண்கிறது இங்கும் வெற்றி வாகை சூடும் . பா.ஜ.க.கர்நாடகாவின் 28 தொகுதிகளில் கடந்த முறை 26 தொகுதிகளை வசப்படுத்தியது இம்முறையும் அதை தக்க வைக்கவே பாஜக வேலை செய்கிறது. இப்படி பாஜக தீவிரமாக வேலை செய்ய இண்டி கூட்டணி தள்ளாடி வருகிறது.
இண்டி கூட்டணியின் குழப்பங்கள் கேராளாவில் கம்யூனிஸ்டை வசைபாடும் ராகுல் காந்தி, மம்தாவை வசைபாடும் கம்யூனிஸ்ட் காங்கிரசை வசைபாடும் ஆம் ஆத்மி என இண்டி கூட்டணி பலவேறு சிக்கலில் சிக்கியுள்ளது. கேரளாவில் முக்கியமாக கம்யூனிஸ்ட் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது என ராகுல் காந்தி கூறி இருப்பது இந்தியா முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை தாண்டி ஸ்டாலினை வேறு எங்கும் பிரச்சாரத்திற்கு அழைக்கவில்லை உதயநிதியை காங்கிரஸ் முதல்வர் விமர்சனம் என தள்ளாடி வருகிறது காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி.
இண்டி கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதால் அங்கிருக்கும் முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள்.கட்சி தலைவர்கள் இணைந்தால் பரவியில்லை வேட்பாளர்களே பாஜகவில் இணைந்து வருகிறார்கள். வட மாநிலங்கள் மட்டுமல்ல தென் மாநிலங்களிலும் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பெறும் என கள நிலவரம் கூறியுள்ளதால் பா.ஜ.க 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.