லடாக் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன இடையே நடந்த மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், ராணுவ வீரர்கள் 2 பேரும் இந்த மோதலில் வீர மரணம் அடைந்துள்ளதாக, பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியது.
சீன ராணுவத்தால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த 3 இந்திய வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி. இவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவார். 22 ஆண்டுகளாக பணிபுரியும் இவர், ஹவில்தாராக பணியாற்றினார்
தமிழகத்தை பொறுத்தவரையில் இந்திய ராணுவ வீரர்கள் இறந்தால் தமிழக திராவிட கட்சிகள் வாய் மூடி வேடிக்கை பார்க்கும். ஆனால் எதாவது பிரச்சனையில் சொந்த நிலத்தில் தாய் தந்தை செய்த தவறால் கிணற்றில் சிறு குழந்தை விழுந்து இறந்தால் அங்கு சென்று ஆறுதல் கூறி அவர்களுக்கு இழப்பீடு வழங்கி மீடியாக்கள் முன் போலி கண்ணீரை விடுவார்கள்.
அதுவும் இந்து மதம் அல்லாமல் வேறு மதம் என்றால் திராவிட கட்சிகள் தன் வீட்டில் யாரவது இறந்துவிட்டது போல் துடிதுடிப்பார்கள். இந்த நிலையில் இதறகு மாற்றாக தமிழக பாஜக நிற்கிறது. ராணுவத்தில் நாட்டிற்காக நாட்டு மக்களுக்காக உயிரிழந்த ராணுவ வீரருக்கு சென்னையில் ஒரு கிரவுண்ட் நிலம் வழங்கியுள்ளது.
பாரதிய ஜனதாக் கட்சி உறுப்பினரும் முன்னால் இந்தியன் ஆயில் நிறுவன ஊழியர் திரு.கணபதி அவர்கள், சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனாவுடனான மோதலில் நாட்டிற்காக தன் இன்னுயிரை இழந்த ராணுவ வீரர் ஹவில்தார் திரு.பழனி யின் குடும்பத்தாருக்கு ‘சென்னையில் தனக்கு சொந்தமான ஒரு கிரவுண்ட் நிலத்தை இலவசமாக அளித்தார்’ இந்த நிகழ்ச்சியில் மாநிலத்தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள் கலந்துகொண்டார்.