38 வருட மைசூர் மாநகராட்சி வரலாற்றில் பாஜக முதல் முறையாக மேயர் பதவியை கைப்பற்றி இருக்கிறது.பாஜகவை சார்ந்த சுனந்தா பலநேத்ரா மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
மதசார்பற்ற ஜனதா தளம் கவுன்சிலர்கள் காங்கிரசிற்கு ஆதரவாக இருப்பார்கள் என்று காங்கிரஸ் மேயர் கனவில் இருக்க கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்தது மத சார்பற்ற ஜனதா தளம்
மதசார்பற்ற ஜனதா தளத்தின் கவுன்சிலர்கள் ஒட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேற பாஜக மைசூர் மாநகராட்சியை வரலாற்றில் முதல் முறையாக மேயர் பதவியை வெற்றி பெற்றுள்ளது.
74 கவுன்சிலர்களை கொண்ட மைசூர் மாநகராட்சிக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு 22 கவுன்சிலர்களும் காங்கிரஸ் கட்சிக்கு 19 கவுன்சிலர்களும் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு18 கவுன்சிலர்களும் கிடைத்தார்கள்
சுயேச்சையாக 5 பேரும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு கவுன்சிலரும் இருந்தார்கள.ஏனைய 9 பேர் மைசூர் கார்பரேசனுக்கு உட்பட்டஎம்.எல்.ஏ எம்பி எம்.எல்.சிக்கள்.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மேயர் தேர்தலில் காங்கிரசும் ஐக்கிய ஜனதா தளமும் கை கோர்த்து கொண்டு ஐக்கிய ஜனதா தளத்திற்கு மேயர் பதவியையும் காங்கிரஸ் கட்சிக்கு துணை மேயர் பதவியையும் பகிர்ந்து கொண்டார்கள்.
இதன் படி மைசூர் மேயரான மத சார்பற்ற ஜனதா தளத்தின் ருக்மினி மதேகௌடாவின் வெற்றியை செல்லாது என்று கரநாடகா உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பு கூற புதியமேயருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் சுனந்தா பலநேத்ராக்கு 26 ஓட்டுக்கள் கிடைத்தது காங்கிரஸ்வேட்பாளர் சாந்த குமாரிக்கு 23 ஓட்டுக்க ளும் கிடைத்தது.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தருவ தாக கூறி இருந்த மதசார்பற்ற ஜனதாதளம் கடைசி நேரத்தில் ஓட்டெடுப்பில்கலந்து கொள்ளாமல் எஸ்கேப்பாகி விட்டது.
ஆக மைசூர் கார்பரேசன் வரலாற்றில்முதல் முறையாக பிஜேபி மேயர் பதவி யை கைப்பற்றி இருக்கிறது. காலம் காலமாக தெற்கு கர்நாடகாவில் காங்கிரஸ் மத சார்பற்ற ஜனதா தளம்இடையே நடைபெறும் போட்டியை வேடிக்கை பார்த்து வந்து பிஜேபி தெற்கு கர்நாடகாவில் காங்கிரஸ் ஐக்கிய ஜனதா
தளம் இணைந்து எதிர்க்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறது.
மைசூர் மேயராக பிஜேபி சார்பாக வெற்றி பெற்றுள்ள சுனந்தா எடியூரப்பாவின் உறவினர் மைசூரை கைப்பற்ற எடியூரப்பாதான் காரணம் என்கிறது கர்நாடக வட்டாரங்கள். முதல்வராக இருந்தாலும் சரி இல்லையென்றாலும் கர்நாடகாவில் அரசியலை தீர்மானம் செய்பவர் எடியூரப்பா தான் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார்.