தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்று பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார் ந
தமிழக பா.ஜ.க தலைவராக, இருந்த முருகன் அவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையை அறிவித்தது தேசிய பா.ஜ.க. இளம் வயதில் ஒரு கட்சியின் பதவியை அளித்தது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலை அவர்கள் வரும் 16ம் தேதி தமிழக பா.ஜ.க தலைவராக சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொறுப்பேற்கிறார்.
இந்த நிலையில் அதற்காக, ஜூலை 14 நேற்றைய தினம் கோயம்பத்தூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார் இந்த நிகழ்வை பாஜகவினர் ஒரு யாத்திரையாக மாற்றியுள்ளார்கள் .மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு அவர் வரும் வழியெங்கும் பாஜகவினர் மேளதாளங்கள் முழங்க கும்ப மரியாதை அளித்தார்கள்
கரூர் மாவட்டம் வந்தடைந்த அண்ணாமலை அவர்கள் கரூர் பேருந்து நிலையம் அருகே பாஜக மேடையில் பேசியதாவது: நான் கரூரை சார்ந்தவன் தான். அரவக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டேன். என்னைப் பற்றி அதிகம் தெரிந்த உங்களிடம் அதிகம் பேச வேண்டியதில்லை. தமிழகத்திலுள்ள 13 ஆயிரம் கிராமங்களுக்கும் பா.ஜ.,வின் கொடி, கொள்கைகளை, சித்தாந்தத்தை உங்கள் ஒத்துழைப்போடு எடுத்துச் செல்ல வேண்டும். கரூர் மாவட்டத்தில் பா.ஜ.க அசுர வளர்ச்சி பெறும். ஆறு மாதத்தில் நீங்கள் அதை பார்ப்பீர்கள். கரூர் மாவட்டம் வித்தியாசமான மாவட்டம். ஆகவே, கரூரில் பா.ஜ.,வின் அரசியலும் வித்தியாசமாக இருக்கும். தமிழகத்தில் நான்கு சட்டசபை உறுப்பினர்களை கொண்ட நமது கட்சி ஐந்து வருடத்தில் 150 சட்டசபை உறுப்பினர்களுடன் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















