தமிழகம் முழுவதும் ஆளும் திமுகவன் சுவர் விளம்பரங்கள் விளம்பர பாதககைகள் வைத்துள்ளார்கள். மேலும் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் என்றால் அந்த பகுதியேவே சுற்றிவளைத்து திமுகவின் விளம்பரங்கள் தான் . மற்ற கட்சிகள் சுவர் விளம்பரம் செய்தாலோ போஸ்டர் ஓட்டினார்கள் என்றால் அடுத்த நிமிடமே மாநகராட்சி நகராட்சி பணியாளர்கள் கிழித்து விடுகிறார்கள்.
இந்த நிலையில் திருவண்ணாமலைக்கு, முதல்வர் ஸ்டாலின் விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகிறார். என்று தெரிந்ததும். தி.மு.க.,வினர் பம்பரமாய் சுழன்று திருவண்ணாமலை நகரம் முழுவதும், மக்கள் அதிகமாக கூடுமிடங்களில், சுவர் விளம்பரம் எழுதி வருகின்றனர். மேலும் பதாகைகள் வைத்து வருகிறார்கள்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், வ.உ.சி., நகரிலுள்ள விநாயகர் கோவில் சுவரில், தி.மு.க.,வினர் சுவர் விளம்பரம் செய்திருந்தனர். இதை அகற்ற வலியுறுத்தி, பா.ஜ.க சார்பில், ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது. உடனே அங்கு வந்த காவல்துறையினர் பா.ஜ.க வினரை சமாதானப்படுத்தி , திமுகவின் சுவர் விளம்பரத்தை அழித்தனர். மேலும் பல கோவில்களில் இதுபோல் திமுகவின் விளம்பரங்கள் இருந்தால் அதை அழிக்க்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என பா.ஜ.க ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் மாநில துணைத் தலைவர் கே.ஆர்.பாலசுப்பிரமணியம்¸ மாவட்ட செயலாளர்கள் சிவசங்கர். பிச்சாண்டி¸ இளைஞரணி பொதுச் செயலாளர் மூவேந்தன்¸ தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் பிரதீஷ்குமார்¸ முன்னாள் மாவட்ட துணை தலைவர் கவிதா¸ அருண்¸ எஸ்.ஆர்.எஸ்.செல்வம்¸ ஏ.சி.விஜய்¸ ஜி.எஸ்.மணி¸ பி.எம்.ஆர். சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாஜகவினரின் போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















