தமிழகம் முழுவதும் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவரும், நிறுவனருமான மக்கள் அரசர் டாக்டர் சு.ராஜா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் டாக்டர் சு.ராஜா கலந்து கொண்டு, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைந்தார்.
பிரதமர் மோடி அவர்களின் செயல் திட்டங்கள் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், கொரோனா காலகட்டத்தில் மோடி அவர்களின் செயல்பாடுகளை உலக நாடுகள் அனைத்தும் பாராட்டியதாகவும், மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் தான் இணைந்ததாகவும் டாக்டர் சு.ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அறம் தொலைக்காட்சி CEO ஸ்ரீதர், பாடலாசிரியர் பா.விஜய், நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார், கலை, ஜனனி பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















