நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மத்தியில் இரண்டாவது முறையாகப் பதவியேற்றதிலிருந்து மத்திய அமைச்சரவையில் இது வரையிலும் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்யப் பிரதமர் மோடி கடந்த சில வாரங்களாக பாஜக தலைவர்களுடன் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.
அமைச்சரவை விரிவாக்கத்தில் பெண்கள் மற்றும் எஸ்.சி / எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கும், இதுவரை வாய்ப்புகள் வழங்கப்படாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளித்து வாய்ப்புகள் வழங்கப்படவிருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது அதில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் உள்பட புதிதாக 43 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பாஜக தலைவராக இருந்து வரும் எல்.முருகன் அவர்கள் நாமக்கல் மாவட்டம் கோனூர் கிராமத்தில் லோகநாதன் என்பவருக்கு மகனாக 1977ஆம் ஆண்டு எல்.முருகன் பிறந்தார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில், சட்ட இளங்கலை பட்டத்தையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை பட்டத்தையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் மனித உரிமை குறித்த முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். கல்லூரியில் படிக்கும் போதே ஆர்எஸ்எஸில் இணைந்து பணியாற்றி உள்ளார். அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்துள்ளது பாஜக
15 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக பதவி வகித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, எல்.முருகன் 2020 மார்ச் மாதம் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
எல்.முருகனுக்கு தமிழ் தவிர ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல புலமை உண்டு. கந்த சஷ்டி கவசம் குறித்து YouTubeல் அவதூறு வீடியோ வெளியிட்டதை கண்டித்து திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை மேற்கொண்டு பாஜகவை வலுப்படுத்தினார். 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். இவரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார்.சட்டப்பேரவை தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தார். இன்று இவர் மத்திய அமைச்சராக உயர்த்தியுள்ளது பாஜக.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















