ஒரு வேளை குஷ்பூ காங்கிரசில் இருந்து இருந்தால் மனுஸ்மிருதி பற்றி திருமாவளவனுடன் இணைந்து பாஜகவை வம்புக்கு இழுத்து கொண்டு இருப்பார்.
இப்பொழுது பாருங்கள் குஷ்பூ திருமாவளவ னை மிரளவைத்து கொண்டு இருக்கிறார். இது தாங்க அரசியல்குஷ்பூ பிஜேபிக்கு வந்ததால் என்ன நன்மை? என்று அவர் பிஜேபியில் சேர்ந்த பொழுது சிலர் கோபம் கொண்டு இருந்தார்கள்.
அவர்களுக்கு நான் முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று கூறினேன்.தமிழகத்தில் மற்ற கட்சிகளை விட பிஜேபி் செல்கின்ற பாதை மட்டும் முட்கள்நிறைந்த பாதையாக இருக்கிறது .
பெரியாரிசம் அம்பேத்காரிசம்,கம்யூனிசம்,திராவிடம்,தமிழ் தேசியம் ஊடகங்கள் திரையுலகம் கிறிஸ்தவம் இஸ்லாம் என்று ஏகப்பட்ட முட்கள் பிஜேபி செல்லும் பாதையில் கொட்டி கிடக்கின்றன மற்ற கட்சிகள் இதில் எந்த பிரச்சினையும் இன்றி சமவெளியில் செல்கின்றன.
இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் மற்ற கட்சிகளுக்கு சராசரி ஓட்டப்பந்தயம் என்றால் பிஜேபிக்கு மட்டும் தடை ஓட்டப்பந்தயம் வைத்து இருக்கிறார்கள்.
பிஜேபிக்கு எதிராக இருக்கும் தடைகளைநாம் ஒவ்வொன்றாக தாண்ட வேண்டும் அது முடியாத நிலையில் அந்த தடைகளை ஒவ்வொன்றாக அகற்றிக் கொண்டுவருவோம்.
குஷ்பூ கூட நாம் எடுத்து போட்ட ஒரு தடை தான். நம் பாதையில் முள்ளாக இடையூறு இருந்து நம்முடைய காலில் குத்தி வந்த குஷ்பூவை இப்பொழுது நம்முடைய எதிரிகள் வரும் பாதையில் போட்டு இருக்கிறோம் .
அது நம்முடைய எதிரிகளை குத்துகுறதோ இல்லையோ இனி நம்மைஒன்றும் செய்யாது என்பதால் குஷ்பூ மாதிரி மாற்று சிந்தனை உள்ளவர்களை பிஜேபி பக்கம் கொண்டு வருவதால் நாம்செல்லும் பாதைகளில் வைக்கப்பட்டுஇருக்கும் தடைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும்.
நம்முடைய பயணமும் இலக்கை நோக்கிவிரைந்து செல்லும்.அதே மாதிரி நம்மு டைய எதிரிகளுடன் மல்லுக்கு நின்று நம்முடைய நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்குவதை விட நம்முடைய எதிரிகளாக இருந்த குஷ்பூ மாதிரி ஆட்களை வைத்து திருமாவளவன் மாதிரி ஆட்களு டன் மோத விடுவது மிகச்சிறந்த அரசியல்.
கட்டுரை :- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.