ஷங்கர், ஆர்.கே. லக்ஸ்மன் ஆகியோரின் கார்ட்டூன்கள் உலகப் பிரசித்தி வாய்ந்தவை. முன்னாள் பாரதப் பிரதமர் நேரு அவர்கள் கார்ட்டூனிஸ்ட் சங்கர் அவர்களைப் பார்த்து, “Don’t Spare me Shankar” என்று கூறியது நினைவிருக்கலாம்.
கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் உயிர் மூச்சு. ஓவியர் வர்மா மீது ஜவஹருல்லா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகம் முழுவதும் காவல்துறையிடம் புகார் அளித்து வருகிறார்கள். இது கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் செயல், வன்மையாக கண்டிக்கத் தக்கவை என்கிறார் வழக்கறிஞர் அஸ்வத்தாமன்.
தலைமைச் செயலாளரை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் தலித் மக்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை உபயோகப் படுத்தி இருந்தார்.
இந்த விவகாரத்தில், தயாநிதிமாறன் அவர்களின் சாதிய வன்மத்தை, பாகுபாடு பார்க்கும் வக்கிரத்தைத் தான் “தோழமை_சுட்டல்” என்றார் திருமாவளவன். திருமாவளவனின் இந்த ‘சப்பைக்கட்டு’ தமிழகம் முழுதும் எதிர்ப்பை உண்டாக்கியது.
அதை விளக்கும் விதமாக கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஓவியர் வர்மா அவர்கள்.
அதற்கு, ஜவஹிருல்லா கண்டனம் தெரிவிக்கிறார் ! விசிக கட்சியினர் ஏவப்பட்டு தமிழகம் முழுவதும் புகார் அளிக்கிறார்கள் ! ஹரிஜன மக்களை கீழ்த்தரமான முறையில் விமர்சித்த தயாநிதி மாறன் மீதோ, தாழ்த்தப்பட்ட மக்கள், நீதிபதியானது திமுக போட்ட பிச்சை என்று திமிர்த்தனம் பேசிய திமுக ஆர்எஸ் பாரதி மீதோ புகார் கொடுக்க முன்வராதவர்கள், இதற்கு மட்டும் புறப்பட்டு வருவது அவலத்தின் உச்சம்.
பாஜக லயோலா கல்லூரியில், நமது இந்து தெய்வங்களையும், நமது தேசிய சின்னத்தையும் இந்திய அரசாங்கத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் நிர்வாண ஓவியங்களை காட்சிப்படுத்தியபோது கருத்து சுதந்திரம் என்று கதறிய கருங்காலிகள
நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களையும் ராணுவத் துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களையும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர், தற்போதைய தெலுங்கானா ஆளுநர் மாண்புமிகு டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், அவர்களையெல்லாம் அவதூறாக பேசியபோதெல்லாம் பேச்சுரிமை என்று பிதற்றிய பித்தர்கள் !
இவ்வளவு ஏன்? தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நிர்வாணமாக படம் வரைந்து காட்சி படுத்திய போதும், அதைக்கூட ஆதரித்த அதர்மவாதிகள்!
கருத்து சுதந்திரம் உயிர் மூச்சு என்று பேசிய பித்தர்கள் ஓவியர் வர்மாவின் ஒரு கார்ட்டூனை சகிக்க முடியாமல் அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் காவல்துறையிடம் புகார் கொடுத்து வருகிறார்கள்.
இதனைப்பற்றி சற்றும் கவலைப்படாத ஓவியர் வர்மா, தான் 2013-ல் வரைந்த பழைய கார்ட்டூனை தற்பொழுது மறுபதிவிட்டுள்ளார்…
