தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்,
OTT தளத்தில் ‘நந்தன்’ திரைப்படத்தைப் பார்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம்.
தனது தேர்ந்த நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் படும் இன்னல்களை நம் கண்முன் கொண்டு வந்த நடிகர் சகோதரர் திரு சசி குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் திரு இரா சரவணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.பல ஆழமான கருத்துக்கள் நிறைந்த ‘நந்தன்’ திரைப்படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















