தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பா.ஜ.க தலைவர், ஷேக் வாசிம் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பந்திபூரா மாவட்டத்தில் நேற்று இரவு தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் அப்பகுதி பா.ஜ.க தலைவரான ஷேக் வாசிம் அவருடைய சகோதரர் உமர் பஷீர், மற்றும் அவருடைய தந்தை ஆஷிர் அஹ்மத் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு ஒன்பது மணி அளவில் உள்ளூர் காவல் நிலையம் அருகில் இருந்த இந்த மூவர் மீதும் தீவிரவாதிகள் தீடீர் தாக்குதல் நடத்தினர். தகவல் கிடைத்தவுடன் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்கள் தீவிரவாதிகள் நடத்தியதாக்குதலில் படுகாயமுற்ற ஷேக் வாசிம் உட்பட மூவரையும் மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர் என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து தகவலறிந்த பிரதமர் மோடி நேற்று இரவு தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும், தாக்குதலில் உயிரிழந்த அப்பகுதி பாஜக தலைவரான ஷேக் வாசிம் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது டிவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர். ஷேக் வாசிமுக்கு 8 வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தாக்குதல் நடைபெற்றபோது ஒருவரும் அவருடன் இல்லை. ஏன் எதற்காக என கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில் கடமையை தவறியதற்காக பாதுகாப்பு வீரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஐஜிபி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் தலையில் குண்டு பாய்ந்துள்ளது என மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.மேலும் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள்இரு சக்கர வாகனங்களில் வந்துள்ளனர். இந்த தாக்குதல் காவல் நிலையத்திற்கு 10 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது. அவர்கள் சைலன்சர் பொருத்திய ரிவால்வரை பயன்படுத்தியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் இந்த கொலையால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், “பாண்டிபோராவில் இளம் பாஜக தலைவர் வாசிம் பாரி மற்றும் அவரது சகோதரர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். அவர்களுக்கு 8 கமாண்டோக்கள் பாதுகாப்பு இருந்தும் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். என பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் டிவிட் செய்துள்ளார்.

Exit mobile version