உலகை அச்சுறுத்தி வரும் கொரோன நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடித்து வருகிறது. ஊரடங்கால் ஏழை எளிய சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்கள் பாதிக்கப்பட்ட கூடாது என்பதற்காக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் 50 நாட்களும் மேலாக உணவு , நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றது.
தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுமார் 1.25 கோடி உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு உள்ளது. அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய மோடி கிட் 35 லட்சம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கோடி பேருக்கு முக கவசம் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் பா.ஜ.க வின் கூட்டுறவு பிரிவு தலைவர் VSJ சீனிவாசன் இன்று பாஜக மாநில தலைவர் எல்.முருகனை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். பின் அவர் கூறுகையில் தொடர்ந்து மக்கள் சேவையில் பா.ஜ.க செயல்பட்டு வருகிறது மேலும் மக்களுக்கு பணியாற்றும் என VSJ சீனிவாசன் கூறினார்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















