தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் மக்கள் பெரும் பாதிப்புக்களாகியுள்ளார்கள். பல கட்சிகள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதில் பா.ஜ.க தான் முன்னிலைப்பெறுகிறது .மழை ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை பாஜக நிவாரண பணிகளை மேற் கொண்டுவருகிறார்கள். அண்ணாமலை மலை அவர்கள் கொளத்தூர் முதல் கடலூர் வரை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார். பாஜக எம்.எல்.ஏக்கள் வானதி சீனிவாசன்,எம்.ஆர்.காந்தி,நைனார் நாகேந்திரன்,சரஸ்வதி அனைவரும் வெள்ள நிவாரண பணிகளில் முழு மூச்சாய் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் சென்னையை பொறுத்தவரையில் பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் சென்னை முழுவதும் கடந்த ஒரு வரமாக பம்பரமாய் சுழன்று நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் துறைமுகம் தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வினோஜ் தொடர்ந்து 7 நாட்களாக 10000 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கி கலக்கி வருகிறார்.
அண்ணாமலை அவர்கள் சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள பத்திரக்கரை எனும் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம் பாஜக சார்பாக உணவு வழங்கப்பட்டது. அப்போது பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்த அப்பகுதி மக்கள், “வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து கிடக்கிறது. தரையில் படுக்க முடியவில்லை. கட்டில் இருந்தால் உதவியாக இருக்கும்” என்று வேண்டுகோள் வடுத்துள்ளார்கள்
உங்களுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து, தருகிறேன் என கூறி மீண்டும் அந்தப் பகுதிக்குச் சென்று, அங்கே இருக்கும் 150 குடும்பங்களுக்குக் கட்டில் வழங்கிவிட்டு வந்திருக்கிறார்அண்ணாமலை இது அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றதோடு திமுகவுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ அந்த பகுதிக்கு வரவே இல்லை என மக்கள் குமுறி வருகிறார்கள்.
இதனால் சென்னை திமுக கோட்டை என புல்லரித்துவரும் திமுக நிர்வாகிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளார்கள்.
வெள்ள காலத்தில் சூறாவளியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு உள்ளார்.தண்ணீர் தேங்கிய விளைநிலங்களில் கால் வைத்த அண்ணாமலை, பாதிப்பு விவரங்கள் பற்றி விவசாயிகளிடம் விவரங்களை கேட்டுக் கொண்டார். ஏன் இங்கு இவ்வளவு வெள்ளம்? எத்தனை ஆண்டுகளாக இத்தகைய பாதிப்புகளை சந்தித்து வருகிறீர்கள் உள்ளிட்ட விவரங்களை அவர் கேட்டார்.
வெள்ள பாதிப்பு பகுதிகளில் நேரில் பார்வையிட்டு நிலைமைகளை கண்டறிவதில் அனைத்து கட்சிகளையும் பா.ஜ.க பின்னுக்கு தள்ளிவிட்டது என்று தமிழக அரசியல் விமர்சகர்கள் கருத்துகளை முன் வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் களத்தில் அண்ணாமலை வேகமாக செயல்படுவதை இது காட்டுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.