நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற உள்ளத்தை ஒட்டி முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவானது நடைபெற உள்ளது.
இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் ஆனது தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர் மற்றும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் முருகன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் சென்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர்,அதேபோல் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நைனார் நாகேந்திரன் தனது மேற்கு மண்டையை தாக்கல் செய்தார்.
கன்னியாகுமரியில் முன்னாள் பாஜக மாநில தலைவர்,முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் .தென் சென்னை தொகுதியில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,மத்திய சென்னையில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வம்,வடசென்னையில் பாஜக மாநில செயலாளர் பால் கனகராஜ்,விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் ராதிகா சரத்குமார்,நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம்,கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் முன்னாள் எம்பி நரசிம்மன்.
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,பெரம்பலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பச்சமுத்து,வேலூர் பாராளுமன்ற தொகுதியில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி.சண்முகம்,தர்மபுரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி,தென்காசி தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்ட்டோர் தங்களுது வேட்பமனுவினை தாக்கல் செய்தனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















