பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது
பாஜக கட்சி விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள்
2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவி காலம் நீட்டிக்கப்பட்டது
ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்
டெல்லியில் ஜே.பி.நட்டா இல்லத்தில், அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆலோசனை.
நாளை தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஆலோசனை
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பெறுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது
நாளை மறுநாள்3வது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில் ஆலோசனை
Get real time update about this post categories directly on your device, subscribe now.















