இந்தியா முழுவதும் பாஜக கால் பாதித்துவிட்டது. தென்னிந்தியாவில் கர்நாடக புதுச்சேரி தவிர தமிழகம்,ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்களில் கால் பதிக்க சற்று தடுமாறி வந்தது, இந்த நிலையில் தான் பாஜக தெலுங்கானா இடைத்தேர்தலில் பாஜக வெற்றி, தமிழகத்தில் 4 எம்.எல்.ஏக்கள் என தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. ஆந்திராவிலும் பாஜக அரசியல் மிக வேகமாக வளர ஆரம்பித்துள்ளது.
தெலுங்கானா :
பின்னர், தெலுங்கானா மாநிலம் உருவானவுடன், டி.ஆர்.எஸ் கட்சியில் அவரது பங்கு முக்கியமானது என்று கருதப்பட்டது.ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் முதல் நிதியமைச்சராகவும், இரண்டாவது சுகாதார அமைச்சராகவும் ராஜேந்தர் இருந்தார்.இவர் பாஜகவில் இணைந்தார். இது டி.ஆர்.எஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
கட்சி மாறியதால் எம்.ஏல்.ஏ பதவியை இழந்த எடலா ராஜேந்தர் தொகுதியான ஹுசராபாத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. சந்திரசேகர ராவ் எவ்வளவோ தில்லு முள்ளுகள் செய்தும் 23500 வாக்குகள் வித்தியாசத்தில் எடலா ராஜேந்தர் வெற்றி பெற்றார்.2018 சட்டமன்ற தேர்தலில் ஹூசுராபாத்தில் வெறும் 1100 ஓட்டுக்க ளை மட்டுமே பெற முடிந்த பாஜக கடந்த மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் எடலா ராஜேந்தர் மூலமாக 1,07,022 ஓட்டுக்களை பெற்று மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது.
இதனால் ஆளும் தெலுங்கானா ராஷ்டி ரிய சமிதி அடுத்த தேர்தலில் வெல்ல முடியாது பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்கிற நம்பிக்கையை பாஜக தெலுங்கானா மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது.
அதே போல் ஆந்திராவிலும் ஒரு அதிரடி அரசியலை நடத்தி காட்ட விரும்புகிறது.அதற்கு நரசபுரம் எம்பி ரகுராம கிருஷ்ண ராஜூவை பயன்படுத்த நினைக்கிறது.
ஆந்திரா:
ஆந்திராவில் ஜெகன் கட்சியை சார்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நரசபுரம் லோக்சபா எம்பி ஆர்ஆர்ஆர் என்கிற ரகுராம கிருஷ்ண ராஜூ நேற்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார். இது ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஜெகன் மோகனுக்கு எதிர் கட்சி பாஜக தான் என்பதை நிரூபிக்க தற்போது ஆந்திராவில் பல அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது பா.ஜ.க.
ரகுராம கிருஷ்ண ராஜூவை எம்பி பதவியை ராஜினாமா செய்ய வைத்து நரசபுரம் லோக்சபா இடைத்தேர்தலில் ரகுராம கிருஷ்ண ராஜூவையே பாஜக வேட்பாளராக முன்னிறுத்தி ஆந்திர அரசியலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான அரசியலில் களம் இறங்க முடிவு செய்துள்ளது. பாஜக.வட மாநிலங்கள் மட்டுமின்றி தற்போது தென் மாநிலங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது பாஜக.
ஒரு வேளை நரசபுரத்தில் தெலுங்கு தேசம் போட்டியிட வில்லை என்றால் நரசபுரத்தில் ரகுராம கிருஷ்ண ராஜூவேமறுபடியும் எம்பியாக வெற்றி பெறுவார். நரசபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலமாக ஆந்திராவிலும் பாஜக ஆட்சியை கைப்பற்ற முயலும். இது தான் தற்போது பாஜகவின் மெகா பிளான் என கூறி வருகிறார்கள்.
மேலும் ரகுராம கிருஷ்ண ராஜூ நேற்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருப்பதன் மூலமாக விரைவில் அவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார் என்கிற செய்தி வெளி வரலாம்.
அதே மாதிரி அடுத்த ஆண்டு பிப்ரவரியி ல் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களுடன் நரசபுரம் லோக் சபாதொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெ ற்று அதில் பாஜக வெற்றி பெற்றது என்கிற செய்தி வெளி வரலாம்.
மேலும் திரிபுரா மாநிலத்தின் பொறுப்பாளராக இருந்த சுனில் தியோதர் தான் தற்போது ஆந்திர மாநில பாஜக பொறுப்பாளர். இவர் 1% சதவீத வாக்குகள் மட்டுமே வைத்திருந்த திரிபுராவில் தற்போது எதிர்க்கட்சி இல்லாத நிலைக்கு பா.ஜ.கவை கொண்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் :
தமிழகத்தை பொறுத்தவரையில் பா.ஜ.க 4 எம்.எல்.ஏகளை பெற்று தனது அரசியல் களத்தை ஆரம்பித்ததுள்ளது. மேலும் தமிழக மாநில தலைவராக அண்ணாமலை என்ற இளைஞர் நியமிக்கப்பட்டதிலிருந்து பாஜகவின் வேகம் இரட்டிப்பாகி உள்ளது. அவர் காலும் திமுக அரசுக்கு எதிராக நடவடிக்கைகள் அனைத்தும் கட்சியினரை மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
திமுக அரசுக்கு மேலும் நெருக்கடியான விஷயம் ஆளுநர் நியமனம். இந்த நியமனம் ஆளும் தி.மு.க தரப்பை ஆட்டிப்படைத்து வருகிறது. நீட் தேர்வு ரத்து இல்லை. கோவில்கள் திறப்பு, 700 பேர் விடுதலை, துணைவேந்தர் நியமனம், என அனைத்திலும் ஆளுநர் எடுக்கப்பட்ட முடிவை தான் திமுக அரசு ஏற்றுள்ளது. இதே போல் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் வந்தால் அதை நேரடியாக ஆளுநர் விசாரிக்கலாம் என்ற சட்டமும் திமுக தலைமைக்கு தலைவியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதாங்க நேரம் என அண்ணாமலை களத்தில் இறங்கி அடித்து ஆடிவருகிறார். அவர் ஊடகங்களை கையாளும் விதமும் வேறு தொனியில் உள்ளது. சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதரவாளர்கள் திமுக அரசை விமர்சித்து வருகிறார்கள்,பதில் தர இயலாமல் திமுக திணறி வருகிறது. மேலும் திமுக சீனியர் உறுப்பினர்களுக்கு அங்கு மரியாதை இல்லாத நிலையில் சீனியர் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைய தூது விட்டுள்ளார்கள்.
கிட்டத்தட்ட 41 சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என தகவல்கள் வெளியாகின. இதுசெய்தியும் திமுக தரப்பில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.மேலும் தமிழகத்தில் உள்ளாட்சி வரை பாஜக வேரூன்றிவிட்டது. திமுக அதிமுக மாற்று பாஜக என தோற்றம் பெற ஆரம்பித்துவிட்டது. இதனை சாதகமாக பயன்படுத்த அண்ணாமலைக்கு டெல்லி சீக்ரெட் அசைமென்ட் கொடுத்துள்ளது. உத்திர பிரதேச தேர்தல் முடிந்த பிறகு தென் இந்தியாவில் பாஜக சுனாமி உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















