தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் யாத்திரை மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த பாதயாத்திரையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பா.ஜ.கவில் இணைந்தவண்ணம் உள்ளார்கள். என் மண் என்மக்கள் பாதயாத்திரை மூலம் தமிழக மக்களிடையே பா.ஜ.கவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் எல்லாம் தமிழகதத்தில் பாஜக இரட்டை வாக்கு சதவீதத்தை பெரும் என கூறியுள்ளது.
தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதை ஒட்டி ஒவ்வொரு கட்சிகளும் தங்களது கூட்டணி பேச்சுவார்த்தைய நடத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக கடந்த கால தேர்தல்களில் பாஜகவுடன் அதிமுக இணைந்து போட்டியிட்டது,சில முரண்பட்ட கருத்துக்களால் பா.ஜ.க அதிமுக கூட்டணி முறிந்தது, இது பாஜக நிர்வாகிகளுக்கு உற்சாகம் அளித்துள்ளது.ஏனென்றால் இந்த முறை பா.ஜ.கவின் பலத்தை காட்டிவிட வேண்டும் என முழுமூச்சில் பணியாற்றி வருகிறார்கள். இதற்கு மோடியின் ஆதரவும் கிடைத்துள்ளது.அதன் காரணமாகவே அடிக்கடி தமிழகத்திற்கு மோடி வருகை தந்து பாஜக நிர்வாகிகளுக்கு ஊக்கத்தை அளித்து வருகிறார்.
இந்த நிலையில் பா.ஜ.க தேசிய ஜனாயநாயக கூட்டணியில் இணைய பல்வேறு கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்கள். தற்போது பா.ஜ.க கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி, புதிய நிதி கட்சி, தேவநாதன் யாதவ் கட்சி மற்றும் ஜான்பாண்டியன் கட்சி உள்ளிட்டவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்கள்.மேலும் அமுமுக ஓ.பி.எஸ் அணியும் இணையும் என்று எதிர்பார்க்கலாம். தமிழக பாஜக சார்பில் பாரளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உத்தேச வேட்பாளர் பட்டியலையும் தயாரித்துள்ளது. இந்த பட்டியலை டெல்லி மேலிடத்தில் கொடுப்பதற்காக இன்று டெல்லி செல்கிறார் அண்ணாமலை.
பாஜக வலுவாக உள்ள தொகுதிகளில் ஒன்று தென்காசி. இந்த தொகுதியில் பாஜகவுடன் நட்பு பாராட்டி வந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தது. இந்த நிலையில் தான் புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்தது. இதனை தொடர்ந்து தென்காசி தொகுதியில் பா.ஜ.க போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. பாஜக பலம் வாய்ந்த தொகுதி என்பதால் செல்வாக்கான நபரை தென்காசியில் போட்டியிட வைக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் தான் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான சோஹோவின் நிறுவனரும் அதன் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு தென்காசியை சேர்ந்தவர் ஆவர். இவரின் ஆதரவு பெற்ற வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளது. தமிழக பாஜக ஸ்டார்ட் அப் பிரிவின் தலைவர் ஆனந்தன் இவர் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன்என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அவரின் பவுண்டேசன் மூலம் தென்காசியில் பல மக்கள் நலத்திட்டங்களையும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி தந்து வருகிறார்.
இளைஞர்களுக்கு வழிகாட்டி என புகழப்படும் சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அவர்களுடன் இணைந்து தென்காசி பகுதியில் பல இளைஞர்களுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்க உதவி புரிந்துள்ளார்கள். ஸ்ரீதர் வேம்பு அவர்களின் ஆதரவு ஆனந்தன் அவர்களுக்கு தான் என்றும் கூறப்படுகிறது. ஆனந்தன் அமெரிக்க ரிட்டன் என்பது குறிப்பிடத்தக்கது. கோடி கணக்கில் சம்பாதித்து வந்த வேலையைவிட்டு அரசியலில் இறங்கியுள்ளார். தென்காசி தொகுதிக்கான தமிழக பாஜக வேட்பாளர் ரேஸில் முன்னணியில் இருப்பவர் ஆனந்தன்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















