பிரச்சாரத்தின் போது டிராக்டரில் ஏர் உழுத திருக்கோவிலூர் பாஜக வேட்பாளர் களிவரதன்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவின் சார்பில் களிவரதன் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில், இன்று திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்னகுணம், ஆயந்தூர், கூடலூர், ஆற்காடு, அருலவாடி, பரனூர், புத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்திற்கு இடையே ஆற்காடு கிராமத்தில், சாலையோர விவசாய நிலையத்தில் டிராக்டரில் ஏரோட்டி மகிழ்ந்தார். மேலும், பிரச்சாரத்தின் போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எப்படி ஒரு விவசாயியோ அதே போன்று வேட்பாளராகிய நானும் ஒரு விவசாயி தான் என என கூறி வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் அவருடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிர்வாகிகள் அதிமுக ஒன்றிய செயலாளர் பழனிசாமி,இளங்கோவன், தனபால்ராஜ்,இராமலிங்கம்,பழனி,சேகர் மற்றும் நகர செயலாளர்கள் சுப்பு (எ)சுப்ரமணியன், ராஜ்குமார்,பாஜக நிர்வாகிகள் மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி வேலூர் மாவட்ட தலைவர் தசரதன் தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன் அமைப்பாளர் சுரேஷ் மற்றும் அஇஅதிமுக, பாமக,பாஜக,தமாகா,புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் உடனிருந்தனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















