இந்து வாக்கு வங்கி உருவாகின்றதா..!!! வேல் யாத்திரைக்கு கூடும் கூட்டம் சொல்லும் செய்தி என்ன ?

தமிழகத்தில் சில நூற்றாண்டுகள் களப்பிரர் ஆட்சி நடைபெற்றது.  இறை வழிபாடுகள் உட்பட தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு என்று அனைத்து தார்மீக செயல்களும் முடக்கப்பட்ட, நசுக்கப்பட்ட காலம் அது.  களப்பிரர் ஆட்சியை தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாறு பதிவு செய்தது.  

திமுக தமிழகத்தை ஆண்ட காலங்களை தமிழக வரலாற்றில் இரண்டாம் களப்பிரர் ஆட்சி என்று கூட சொல்லலாம்.

இறை நம்பிக்கைகள் கொச்சைப்படுத்தப்பட்ட காலங்கள் இவை. எவையெல்லாம் தமிழகத்தின் பண்பாடாக இருந்ததோ, எவையெல்லாம் தமிழ் நாகரிகத்தின் அஸ்திவாரமாக விளங்கியதோ, அவை அனைத்தும் சிதைக்கப்பட்டன. “ஏற்பது இகழ்ச்சி” என்று வாழ்ந்த தமிழன், இலவசமாக என்ன கிடைக்கும் என்று ஆலாய்ப் பறந்தான். 

நேர்மையாக நடப்பதையே வாழ்நாள் லட்சியமாக கொண்டு வாழ்ந்த தமிழர்கள், “தேன் எடுக்க சென்றவன்  புறங்கையை நக்கத்தான் செய்வான்” என்று சொல்லத் தொடங்கினான்.  ‘விஞ்ஞானபூர்வ ஊழல்’ என்று பட்டம் கூட வாங்கினான்.நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்திய ஆட்சி திமுக ஆட்சி.

“ஹிந்து என்றால் திருடன்” என்று பொதுமேடைகளில் பேசியதும் திமுக தான். தமிழ் கடவுளாம் முருகப் பெருமானையும், தமிழ் மக்கள் காலை எழுந்தவுடன் தினமும் கேட்கும் கந்தர் சஷ்டிக் கவசத்தையும் கேவலமாக பேசிய கருப்பர் கூட்டத்தை பின்னால் இருந்து இயக்கியதும் திமுக தான்கருப்பர் கூட்டத்தையும் அதன் பின்னே இருந்து செயல்படும் கயவர் கூட்டத்தையும் கருவறுக்க தமிழக பாஜக வேல் யாத்திரையை துவக்கியது.

உண்மையில் வேல் யாத்திரை துவக்கப்பட்ட போது அதற்கு இந்த அளவு இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் யாத்திரை செல்லும் இடமெல்லாம் ஆயிரக்கணக்கில் அலையலையாய் மக்கள் பாஜகவை நோக்கி வரத் துவங்கினர்.

பாஜகவை எதிர்க்கும் பத்திரிகையாளர்கள் கூட, வேல் யாத்திரைக்கு வரும் கூட்டத்தை பார்த்து பாஜக தமிழகம் முழுவதும் வளர்ந்துவிட்டது என்று தொலைக்காட்சி விவாதங்களில் வெளிப்படையாக பேசுகிறார்கள்.  

ஒவ்வொரு சேரியிலும் ஒவ்வொரு காலணியிலும் கூட பாஜக கடல் அலை போல உள்ளே புகுந்து விட்டது, என்று வருத்தப்படுகிறார் ஒரு சிறுத்தைக்குட்டி.தமிழகத்தில் மிகப்பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது.

தற்போது எங்கு பார்த்தாலும் பாஜக கொடி கம்பங்களை காணமுடிகிறது. பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்க, மக்கள் அலைகடலென திரண்டு வீதிக்கு வரத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு நாளும் மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. 

வேல் யாத்திரைக்கு வரும் கூட்டத்தினர்  யாரும் குவாட்டருக்கும் பிரியாணிக்கு வரும் அரசியல் கூட்டம் அல்ல. 

இத்தனை காலம் ஹிந்து மதத்தை மட்டுமே துச்சமாக பேசுகிறார்களே என்று அடக்கி வைக்கப்பட்ட ஒரு தலைமுறையின் தார்மீகக் கோபத்தின் வெளிப்பாடு இந்த கூட்டம்.

திருமாவளவன் ஹிந்து பெண்கள் அனைவரும் வேசிகள் என்று கேவலமாக பேசியதாலோ என்னவோ தெரியவில்லை, வேல் யாத்திரை கூட்டங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

எந்த ஒரு அரசியல் கூட்டத்திற்கும் இந்த அளவு பெண்கள் கூட்டம் வந்ததில்லை என்று காவல்துறை அதிகாரிகளே கூட சொல்கிறார்கள். 

இங்கே இளைஞர்கள், மகளிர் ஆகியோரின் பங்கு ஆச்சரியப்படும் அளவிற்கு பிரமாண்டமாக இருந்தது. ஆயிரக்கணக்கான மகளிர் மற்றும் இளைஞர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டிருந்தது, பாரதிய ஜனதா கட்சி இளைஞர்களையும் பெண்களையும் எவ்வளவு ஈர்த்துள்ளது என்பதின் சான்றாகும்.

இது நல்லதொரு முன்னேற்றத்தின் அறிகுறியாகும். வேல் யாத்திரையில் அதிக அளவில் பெண்கள் கலந்து கொள்வது குறித்து கேட்டபோது, “மகளிர் அணி மிகச்சிறப்பாக உழைத்திருப்பது மகளிரின் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது தெளிவாக தெரிகிறது.

இந்த முன்னேற்றம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இனி மகளிர் சக்தியோடு பாரதிய ஜனதா கட்சி வீரநடை போடும்” என்கிறார் நீலகிரியை சேர்ந்த சபீதா போஜன்.தமிழகத்தின் மூலை முடுக்குகளில் நடந்த கூட்டங்களிலும் இளைஞர்களின் எண்ணிக்கை கவனிக்கும்படி  இருந்தது என்பது வேல் யாத்திரையின் மற்றுமொரு சிறப்பம்சம். 

இதற்குப் பின்னால் உள்ள பாஜக இளைஞர் அணியின் உழைப்பு நன்கு புலப்படுகிறது.

தமிழகம் காவி மயமாகிறது என்று ஒவ்வொருவரும் உணரத் துவங்கினர் முருகன் மீது கை வைத்த கருப்பர் கூட்டம், தேன் கூட்டில் கை வைத்தது போல ஓடத்துவங்கியது.காவித் தமிழகத்தைப் பார்த்து கருப்பு தமிழகம் முதன்முறையாக அச்சப்படுகிறது. 

 யுகசந்தி என்ற வார்த்தையை படித்திருக்கிறீர்களா?  ஒரு யுகம் முடிந்து மற்றொரு யுகம் துவங்கும் காலத்தையே யுகசந்தி என்று குறிப்பிடுகிறார்கள்.  தமிழகத்தில் கடவுள் எதிர்ப்பு யுகம் அஸ்தமிக்க துவங்கிவிட்டது.  தீய சக்திகளின் முடிவின் ஆரம்பம் நிகழ்ந்துவிட்டது. 

ஆன்மீக அரசியலை நோக்கி தமிழகம் முதல் சில அடிகளை எடுத்து வைத்து விட்டது.  ஹிந்து மதத்தை எதிர்த்து அரசியலை நடத்தி வந்த திமுக மறுபடியும் காலாவதியான அதே வன்மத்தை கையில் எடுக்கிறது. 

விநாச காலே விபரீத புத்தி என்பது மீண்டும் நிரூபணமாகும்.வரக்கூடிய தேர்தல், தமிழகத்தின் தலைவிதியை மாற்றக் கூடிய தேர்தலாக அமையக்கூடும். திமுக 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த முறையும் தோற்றுவிட்டால், திமுக எனும் தீயசக்தி இனிமேல் தலைதூக்க முடியாமல் அழிந்துவிடும்.

திமுகவை நம்புவது மண்குதிரையை நம்புவது என்பதை தமிழக ஊடகங்களும், தமிழக அரசு அதிகாரிகளும் உணரத் துவங்குவார்.

தமிழக தேர்தல் வரலாற்றில் வேல் யாத்திரை என்பது ஒரு முக்கிய திருப்பு முனையாக இருக்கும். 

தமிழகம் திராவிட சிந்தனைகளையும், இந்து விரோத சிந்தனைகளையும், தூக்கி எறிந்து தேசிய நீரோட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ள வேல் யாத்திரை வழிவகுத்தது என்று வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும்.வட மாநிலங்களில் பாஜகவின் பிதாமகன்லால் கிருஷ்ண அத்வானி அவர்களின் ரதயாத்திரை நடந்தபோது எவ்வளவு எழுச்சி இந்து மக்கள் மனதில் உருவானதோ, அதேபோல ஒரு மிகப்பெரிய எழுச்சி இன்று தமிழகத்தில் உருவாகி வருகிறது.  

நம் கண்முன்னே தமிழகத்தில் புது சரித்திரம் படைக்கப் பட்டு வருகிறது.  நாத்திகர்களின் ஆட்சி அஸ்தமித்து, தமிழகத்தில் ஆன்மீக அரசியல் உதயமாகிறது.   நம் கண் முன்னே சரித்திரம் படைக்கப்படுவதை காணும் வாய்ப்பு கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள். இது போல ஒரு வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை.

நம் முன்னே இருக்கும் கேள்வி என்னவென்றால், சரித்திரம் படைக்க படுவதை நாம் தூரத்திலிருந்து பார்க்கப்போகிறோமா?

அல்லது ஒன்றுபட்ட இந்து சக்தியாய் இணைந்து, நம் பங்களிப்பை நல்கி, சரித்திரம் படைக்கப் போகிறோமா? என்பதுதான்.இந்தத் தேர்தலில் நம் முன் ஒரே குறிக்கோள் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும்.

ஹிந்து விரோத சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் தீயசக்தி தோற்கடிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் களப்பிரர் ஆட்சி இனிமேல் தலைதூக்க கூடாது.

கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர்:- பத்மநாபன் நாகராஜன்

Exit mobile version