நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வன்முறைகளையும், முறைகேடுகளையும் கட்டவிழ்த்து விட்டு, திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியை தழுவினோம் என்று கூறிய அதிமுக, வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.
ஆனால் ஆளும் கட்சியான திமுகவின் 13 கட்சி கூட்டணியையும், பலம் பொருந்திய அதிமுகவையும் எதிர்த்து தனியாக களம் கண்ட பாஜக, 9,48,734 வாக்குகளைப் பெற்று, மூன்றாவது கட்சியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தனித்துப் போட்டி என்று முடிவெடுத்த பின்னர், மிகக் குறுகிய காலத்தில் பாஜகவால், 51% இடங்களில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்த முடிந்தது. அப்படி இருந்தும் 323 இடங்களை கைப்பற்றி பாஜக வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. மேலும் 5.61% வாக்குகளையும் பெற்று உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 200 இடங்களைப் பெற்று பாஜக இரண்டாவது இடத்தை கைப்பற்றி உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் பரவலாக தாமரை மலர்ந்து உள்ளது. சென்னையில் 134-வது வார்டை கைப்பற்றி திமுகவின் கோட்டையில் ஓட்டை போட்டது. சென்னை மாநகராட்சியின் பல வார்டுகளில் பாஜக 2-வது இடத்தை பிடித்து உள்ளது.
கொங்கு மண்டத்தில் கொலுசு பரிசு, குவாட்டர் பார்ட்டி, பிரியாணி விருந்து, கரூரில் இருந்து திமுகவினாரால் இறக்குமதி செய்யப்பட்ட ரவுடிகளின் அராஜகம், வாக்குச் சாவடிகளில் திமுகவின் கள்ள ஓட்டு, இவை அனைத்தையும் மீறி பாஜக கணிசமான இடங்களை கைப்பற்றி உள்ளது.
கோவை மாவட்டம் சிறுமுகை பேரூராட்சி 16-வது வார்டில் (பழைய எண் – 9) 4-வது முறையாக பாஜக வெற்றி வாகை சூடி தனி முத்திரை பதித்து உள்ளது.
இந்த வார்டில் 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்ட காரமடை கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் வி.சுவாமிநாதன் வெற்றி பெற்றிருந்தார். தற்போது (2022) நடந்து முடிந்த தேர்தலில் அவரது மனைவி அமுதா வெற்றி வாகை சூடி, பாஜகவின் தொடர் வெற்றியை தக்க வைத்து உள்ளார்.
அமுதா 236 வாக்குகளை பெற்றுள்ளார். 2-வது இடம்பிடித்த அதிமுகவின் சுமதி, 200 வாக்குகளையும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுதா 196 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
எனவே சிறுமுகை பேரூராட்சியின் 16-வது வார்டை, 4-வது முறையாக பாரதிய ஜனதா கட்சி தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















