அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். உத்திர பிரேதசம். 23 கோடி மக்கள் தொகையை கொண்ட மாநிலம் ஆகும். மினி இந்தியா என்றே அழைக்கலாம். உத்திர பிரேதச தேர்தல்கள் தான் இந்தியாவின் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியை கொண்டது. தற்போது அங்கு பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. யோகி ஆத்யநாத் முதல்வராக உள்ளார். இவரின் அதிரடி நடவடிக்கைகள் இந்திய மக்களுக்கு பிடித்திருக்கிறோதோ இல்லையோ அம்மாநில மக்களுக்கு பிடித்துவிட்டது போல..
தற்போது உத்திரபிரேதசத்தில் நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் மொத்தம் உள்ள 75 இடங்களில் 67இடங்களில் பிஜேபி வெற்றி பெற்று இருக்கிறது.தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ரேபரேலி அமேதி மாவட்ட பஞ்சாயத்து களை பிஜேபி கைப்பற்றி இருக்கிறது.முலாயம் சிங் யாதவின் பிறந்த மண்ணான மெயின்புரியில் பிஜேபி முதல் முறையாக வெற்றி பெற்று இருக்கிறது.
உத்தரபிரதேசத்தில் சென்ற வாரம் நடைபெற்ற ஜில்லா பஞ்சாயத்து தேர்தல்களில் (Zila Panchayat or District Council) மொத்த 75 இடங்களில் 65 இடங்களில் வென்று சரித்திரம் படைத்தது பாஜக. நேற்று பிளாக் பிரமுக் எனப்படும் கிராம பஞ்சாயத்துக்கும் ஜில்லா பஞ்சாயத்துக்கும் இடைப்பட்ட பகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களில், மொத்த 825 இடங்களில் 626 இடங்களை பிடித்து மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது பாஜக. காங்கிரஸ் – 5 & சமாஜ்வாதி – 98! நகர்ப்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் யோகி அரசின் செல்வாக்கை இது உறுதி செய்கிறது.
2022 உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த வெற்றி பார்க்கப்படுகிறது. உ.பியில் 2017 சட்டசபை தேர்தலில் 324 தொகுதிகளை பாஜக கூட்டணி வென்று அசத்தியது. கடந்த தேர்தலை ஒப்பிட்டால் இது 277 தொகுதிகள் அதிகமாகும். இதில் இரு குட்டி கூட்டணி கட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், பாஜக மட்டும் 311 தொகுதிகளை வென்றுள்ளது. அனைவரும் இதை உபி யின் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் தான் இந்த பஞ்சாயத்து தேர்தல் வெற்றி என்கிறார்கள். ஆனால் அதில் பாதியளவு உண்மை மட்டுமே இது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான் உத்திர பிரேதேசம் பஞ்சாயத்து தேர்தல் வெற்றி ஆகும்.