உலகிலேயே அதிக தொண்டர்களை கொண்ட கட்சிகளுக்கான பட்டியலில் இந்தியாவின் 5 அரசியல் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பா.ஜ., முதலிடத்திலும், காங்., 4வது இடத்திலும், அதிமுக 7வது இடத்திலும் உள்ளன.
அரசியல் கட்சிகளில் பெரியது, சிறியது என்பதை கட்சியின் தொண்டர்களின் எண்ணிக்கையை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தான், அக்கட்சிக்கு கிடைக்கும் ஓட்டு சதவீதமும், ஆட்சி அதிகாரமும் உறுதி செய்யப்படுகிறது. இது சில நாடுகளில் மாறுபடலாம். ஆனால் இந்தியாவில் பெரிய கட்சி என்பது தொண்டர்களை அடிப்படையாக கொண்டது.
இந்நிலையில் உலகிலேயே தொண்டர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மிகப்பெரிய கட்சி எது என வேர்ல்டு அப்டேட் (புள்ளியியல்) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் முதல் 15 இடங்களில் ஐந்து இந்திய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பா.ஜ., முதலிடத்தை பிடித்துள்ளது. காங்கிரஸ் 4வது இடத்திலும், அதிமுக 7வது இடத்திலும், ஆம்ஆத்மி கட்சி 9வது இடத்திலும், தெலுங்கு தேசம் கட்சி 14வது இடத்திலும் உள்ளன.