புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. எப்போதும் எப்போதும் போல் போல் ஆளும் கட்சியின் அராஜகம் அரங்கேறியது. அதை ஊடகங்கள் மறைத்தன.அங்கங்கு தேர்தல் அலுவலர்கள் திமுகவினரால் தாக்கப்பட்டார்கள். ஊடகம் எதையும் கண்டு கொள்ளாமல் பாஜக பற்றிய பொய்யான செய்தியை பரப்பின.
கோவை குருடம்பாளையம் வார்டு இடைதேர்தலில் 9 -வது வார்டில் அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக மட்டுமே போட்டியிட்டது . சுயேட்சை வேட்பாளராக நாமினேஷன் போட்ட கார்த்திக் விலகி இருந்தாலும் வாக்கு சீட்டில் அவர் பெயரும் கார் சின்னமும் இருந்தது .
கார்த்திக் என்பவர் பாஜகவை சேர்ந்தவர் இவர் வசித்து வருவது கோவை குருடம்பாளையம் 4 வார்டில் இவரின் குடும்பத்திற்கும் 4 வது வார்டில் தான் ஓட்டுகள் உள்ளது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் இவர் போட்டியிட்டது 9 வது வார்டில் இவர் சுயேட்சையாக போட்டியிட்டார். இவருக்கு ஒரு ஓட்டு தான் விழுந்தது.
உடனே தமிழக ஊடகங்கள் பாஜக வேட்பாளர் ஒரு ஓட்டு என கிண்டல் செய்தார்கள். குடும்பத்தில் உள்ளவர்களே ஓட்டு போடவில்லை என கேலி செய்தார்கள்.
ஒத்த ஓட்டு பாஜக என்று கிண்டலடித்து துபாய் வரை சென்று திமுக ஆனந்தப்பட்டது. ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல 1446 வாக்குகள் வித்தியாசத்தில் வள்ளியூ்ர் செட்டிகுளம் 15 வது வார்டில் திமுக வேட்பாளரை தோற்கடித்து இருக்கிறார் பாஜகவை சேர்ந்த சகோதரி ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன்.
உள்ளாட்சி அமைப்புகளில் திமுகவின் சார்பாக வெற்றி பெற்றவர்களில் பலர் அந்த பகுதிகளில் செல்வாக்கு உள்ள தனி மனிதர்கள்.தான்ஆளும் கட்சியாக இருந்தால் 5 வருடத்திற்குள் சம்பாதித்து விடலாம் என்கிற ஆசையினால் திமுக லேபிளை ஒட்டிக்கொண்டவர்கள்.
300 மேற்பட்ட இடங்களில் தாமரை சின்னம் வெற்றி பெற்றுள்ளது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் இந்த வெற்றி நாளை கோட்டையை பிடிக்கப்போகும் அச்சாரம் என பாஜக கூறியுள்ளது. பாஜகவினர் மத்தியில் ஒத்த ஓட்டு என கிண்டல் செய்தவர்களை தேடி பிடித்து பாஜகவிடம் தோற்ற திமுக, என வச்சு செய்துவருகிறார்கள் பாஜகவினர்.
தற்போது பாஜகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அந்த பெண் சிங்கம் போட்டோ தான் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் தோல்வி அடைந்த பாஜக வேட்பாளர்களை நேரில் சந்தித்து தோல்விக்கு காரணம் மேலும் வெற்றி பெற என்ன வழி கட்சிக்காரர்கள் ஒத்துழைப்பு பற்றி எல்லாம் விசாரிக்க உள்ளார் அண்ணாமலை.
இந்த சந்திப்பு மற்ற கட்சிளுக்கும் சரி பாஜகவினருக்கும் சரி சற்று கிலியை உண்டாக்கியுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















