டில்லி சட்டமன்ற தேர்தலில், டெல்லியில் தமிழக மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில், பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. கடந்த வாரம் டில்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றி பெற்று, டெல்லியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் . 16.02.2020 டெல்லி முதல்வராக பதவி ஏற்கிறார் .
கடந்த சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.க மூன்று தொகுதிகளை கைப்பற்றி, 33 சதவீத பெற்றது. இந்த முறை 8 தொகுதிகளில் வெற்றி பெற்று, 38.51 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. தனது பலத்தை அதிகரித்து வருகிறது. டெல்லி தேர்தல் சமயத்தில் மட்டுமே பா.ஜ. இங்கு வேலை செய்தது,இதனால் தான் தோல்வி ஏற்பட்டுள்ளது என கள நிலவரம் தெரிவிக்கிறது. காங்கிரஸ் கட்சி, 63 தொகுதிகளில், ‘டிபாசிட்’ இழந்து, படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
டில்லியில் தமிழர்களை பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக, சுமார் நான்கு லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். தமிழர்கள் வசிக்கும் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒரு குழு நியமிக்கப்பட்டு அந்த குழுவானது டெல்லி தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பிரசாரம் செய்தனர். குழுவிற்கு வழிகாட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன், செயல்பட்டார். டெல்லி பிரச்சாரத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, ஏ.பி.முருகானந்தம், வானதி சீனிவாசன், நடிகையர் நமீதா, காயத்ரி ரகுராம், நடிகர் ராதாரவி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பாடார்பூர், லட்சுமி நகர் போன்ற பகுதிகளில், தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று, திண்ணை பிரசாரம் செய்தனர். அவர்களின் பிரச்சாரத்தில் ‘ஜஹான் ஜூக்கி, வஹா மக்கான்’ என்ற, ‘எங்கே குடிசை; அங்கே வீடு’ என்ற கோஷத்தை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரசாரத்தில், தமிழக பா.ஜ.,வினர் ஈடுபட்டனர். அது மட்டுமில்லாமல் பிரதமரின் நலத்திட்டங்கள் குடியுரிமை சட்டம் ஆகியவற்றை வைத்து தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த தீவிர பிரச்சாரம் பாஜகவிற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மொத்தம் வென்ற தொகுதியில் 4 தொகுதிகள் தமிழர்கள் வசிக்கும் தொகுதியாகும்.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழர்களின் ஓட்டுகள், ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுக்கு விழவில்லை என்பது குறிப்பிடதக்கது தமிழக காங்கிரஸ் சார்பில், விஜயதாரணி, மயூரா ஜெயகுமார், டி.என்.முருகானந்தம், பொன்.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் பிரசாரம் மேற்கொண்டும், டில்லி வாழ் தமிழர்களிடம் எடுபடவில்லை. அதனால் தான் அக்கட்சியினர், தமிழர் பகுதிகளிலும், டிபாசிட் இழந்தனர். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த தேர்தலை விட, 10 ஆயிரம ஓட்டுகளை, குறைவாக பெற்றுள்ளார்.
துணை முதல்வரோ, போராடி தான் வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ., வேட்பாளர்கள், 26 சட்டசபை தொகுதிகளில், குறைந்த வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். பா.ஜ.,வுக்கு மோசமான தோல்வி அல்ல; ஆம் ஆத்மிக்கு அமோக வெற்றியும் அல்ல.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















