கொரோனா பெருந்தொற்று, இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழகம், கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பாஜக இளைஞரணி சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் செய்யப்பட்டன.
அதே போல இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் பாஜக இளைஞரணி சார்பில் நிவாரண உதவிகனை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தவிர குழுவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் பாஜக இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர்.
இது தவிர ஏழை மக்களுக்கு கொரோனா மருத்துவ கிட்டும் வழங்கி வருகின்றனர். இன்று காலை 10.30 மணி அளவில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் 2000 குடும்பங்களுக்கு 10 முக கவசங்கள் (3 லேயர் மாஸ்க்), Sanitizer பாட்டில், கை சுத்தம் செய்யும் Soap, கபசுர குடிநீர் மருந்து பாக்கெட், Digital Thermometer ஆகிய பொருட்கள் அடங்கிய மருத்துவ கிட் வழங்கப்பட்டது. இதளை பாஜக இளைஞரணி மாநிலத்தலைவர் வினோஜ் பி செல்வம் தொடங்கி வைத்தார்.
இது போல தமிழகம் முழுவதும் பாஜக இளைஞரணி சார்பில் மருத்துவ கிட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த ஆண்டு கொரோனா நிவாரணங்கள் வழங்கியதை போலவே இந்த ஆண்டும் பாஜக இளைஞரணியினர், நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
ஆனால் திமுகவினர் இம்முறை நிவாரண உதவி எதுவும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.