பாலிவுட், மற்றும் கேரள திரையுலகத்தில் போதை பொருட்களை பழக்கம் அதிகமாகி உள்ளது.
மேலும் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களை வளராமல் தடுப்பதற்காகவே இந்த போதை பழக்கத்தை வளரும் நடிகர்களுக்கு ஏற்படுத்திவிடுவார்களாம்.
இதற்கு காரணம் பாலிவுட் திரையுலகம் எப்போதும் கான்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அதே போல் பல மாஃபியா கும்பல்கள்களிடம் பாலிவுட் இருந்து வருகிறது. சுஷாந்த் மரணமும் இதே பாணியில் தான் நடந்துள்ளது. மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு இறந்தார். பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில் பல உண்மைகள் வெளிவர தொடங்கின.
இதனால் பாலிவுட் திரையுலகம் நடுங்கி போய் உள்ள நிலையில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மூத்த மகன் ஆர்யான்கான் தனது ஆண்-பெண் நண்பர்களுக்கு மும்பை கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த உல்லாச கப்பலில் போதை பார்ட்டி கொடுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட போதை பொருட்களை அவர்கள் பயன்படுத்தியதை கண்டு பிடித்துள்ளனர்.
இந்தியாவில் போதைபொருள் வழக்கம் அதிகம் பெருகிற்று, அது பல நடிகர் நடிகையர் சாவில் கொலையில் தெரிந்தாலும் சுஷாந்த்சிங்கின் சாவுக்கு பின் பெரிய விவகாரமாயிற்று நாடெங்கும் அதிரடி சோதனைகள் தொடங்கின, சினிமா நட்சத்திரங்கள் முதல் பிரபலங்கள் வரை வளைக்கபட்டனர்.
லட்சதீவு முதல் குஜராத் கடற்கரை தமிழகம் என போதைபொருட்கள் அகபட்டு கொண்டே இருந்தன, இப்பொழுதும் அகப்படுகின்றன மோடி அரசு மிகபெரிய அளவில் போதை ஒழிப்பில் இறங்கியிருக்கும் நேரம் இன்று பிரபல நடிகர் ஷாரூக்கானின் மகன் போதைபொருள் விசாரணையில் சிக்கியிருக்கின்றான்.
இது நாடெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது முன்பு சீனாவின் ஜாக்கிசானின் மகன் போதை வழக்கில் சிக்கியபொழுது அந்த பெரும் நடிகன் சொன்னான் “என் மகனை நல்ல முறையில் வளர்க்காமல் என் கடமையில் இருந்து தவறிவிட்டேன். இந்த சமூகத்துக்கு தவறான ஒருவனை கொடுத்துவிட்டேன் என்னை மன்னியுங்கள்”
அது ஜாக்கிசானின் மனம் என்ன என்பதை காட்டிற்று, ஷாரூக்கானின் மனம் என்ன என்பதை விரைவில் தெரிந்து கொள்ளலாம் நாடெங்கும் போதை வஸ்துகளும் அதன் பயன்பாடும் அதிகரிப்பது தேசத்தின் ஆபத்து, இதை தனி அதிரடி பிரிவுகளை உருவாக்கி உடனே களைய வேண்டும்.