கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே நான்காம் கட்ட ஊரடங்கின் போது மக்களின் வசதிக்காக பல்வேறு தளர்வுகள் அறவிக்கப்பட்டன. இதன்படி வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்து இருந்தார்.
ரயில்கள் அனைத்தும் ஏசி அல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் இயக்கப்படும் எனவும், ரயில் டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும். ரயில்டிக்கெட் எடுப்பதற்காக பயணிகள் எந்த ரயில் நிலையத்திற்கும் வர கூடாது எனவும் அமைச்சர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று ( 21ம் தேதி) முதல் துவங்க உள்ளது.