மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் ஏற்பாடுகள் என மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. பா.ஜ.கவுடன் த.மா.க புதிய தமிழகம் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி ஜான்பாண்டியன் ஓ.பன்னீர் செல்வம் ஆகியவை கூட்டணியை அறிவித்துள்ளன. இது தவிர ,டிடிவி தினகரன் தேமுதிக பாமாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுளது பாஜக. திமுகவில் வழக்கமான தோழமை கட்சிகளோடு உடன்பாடு ஏற்பட்டு அதே கூட்டணி தொடர்கிறது.
ஆனால் அதிமுகவில் இன்று வரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மட்டும் நடந்து வருகிறதே தவிர அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகி நிர்வாகிகள் பலபேர் பாஜகவில் இணைந்து வருகிறார்கள் . கடந்த 2011ல் ஜெயலலிதா இருந்தபோது நடந்த சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் நின்று வென்று எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர் ராஜலெட்சுமி. இன்று அவர் அதிமுகவிலிருந்து விலகி அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைத்து கொண்டார் இணைந்தார்.
அதுமட்டுமில்லாமல் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்வி குழுமத்தின் துணைத் தலைவரும், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளருமான தொழிலதிபர் திரு. N. ராமேஸ்வரன் அவர்கள், மாவட்ட இணைச் செயலாளர் திரு. ரவிக்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் திரு.இராமசாமி, திரு. கவிக்குமார் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் ஒன்றிய & நகர நிர்வாகிகள், கூண்டோடு தங்களை பாஜகவில் இணைத்து கொண்டுள்ளார்கள்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த திடீர் கட்சி மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதிமுகவில் பல எம்.எல்.ஏகளுடன் பாஜக தொடர்ந்து பேசிவருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அண்ணாமலை அதிமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே தான் இருப்பார் என பாஜகவினர் கூறி வருகிறார்கள்.
அதிமுக முன்னாள் சட்டமன்ற இணைப்பு குறித்து பாஜக மாநில தலைவர் தனது சமூக வலைதளபக்கத்தில் கூறியுள்ளதாவது : சென்னை மயிலாப்பூர் தொகுதி முன்னாள் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் சகோதரி திருமதி. ராஜலட்சுமி அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.கிஷரெட்டி, மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு.விகே சிங் மற்றும் தமிழக பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் திரு.அரவிந்த் மேனன் பாஜக தமிழ்நாடு மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்கள். சகோதரி திருமதி. ராஜலட்சுமி அவர்களை மனதார வரவேற்பதோடு, சாமானிய மக்களுக்கான பாரதப் பிரதமரின் அரசியல் பணிகளுக்கு, அவரது மேலான பங்களிப்பையும் கோருகிறேன்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்வி குழுமத்தின் துணைத் தலைவரும், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளருமான தொழிலதிபர் திரு. N. ராமேஸ்வரன் அவர்கள், மாவட்ட இணைச் செயலாளர் திரு. ரவிக்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் திரு.இராமசாமி, திரு. கவிக்குமார் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் ஒன்றிய & நகர நிர்வாகிகள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, இன்றைய தினம்,பாஜக தமிழ்நாடு மூத்த தலைவர் அண்ணன் திரு.ஹெச்.ராஜா அவர்களின் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.அவர்கள் அனைவரையும் மனதார வரவேற்பதோடு, தமிழக மக்கள் எதிர்பார்க்கும் நேர்மையான அரசியல் தமிழகத்தில் உருவாக, அவர்கள் ஒவ்வொருவரின் உழைப்பையும் கோரிக்கொள்கிறேன்.என பதிவிட்டுள்ளார்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















