BREAKING தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செந்தில்பாலாஜி பொன்முடி நீக்கம்.

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி, மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா’ என்று கேள்வி எழுப்பியது. அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இந்து மதத்தில் உள்ள சைவம் மற்றும் வைணவம் குறித்து கொச்சியாக பேசிய திமுக அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு நெருக்கடி அதிகரித்தது. பதவி விலக முன்வந்துள்ள இருவரும், தங்களின் ராஜினாமா கடிதங்களை முதல்வரிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு

செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு

பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்,அமைச்சரவை மாற்றத்தில், ஏற்கனவே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, கிறிஸ்துவ நாடாரான மனோ தங்கராஜுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு

நாளை மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

Exit mobile version