கொரோன வைரஸ் உலகை ஆட்டி வருகிறது இந்தியாவில் 606 நபர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது இதில் 42 பேர் குணமடைந்துள்ளனர். 11 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 25 பேர் நோய் தொற்றும் ஒருத்தர் பலி 2 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் கொரோன தொற்று மிக வேகமாக பரவி வருகிறது அதற்கான மருத்துவ வசதிகளை மத்தியமாநில அரசுகள் எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து மேரு வங்கத்தில் தொழிலதிபர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு தனது 30 பங்களாக்களை அரசு பயன்படுத்தி கொள்ள தானம் அளித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சார்ந்தவர் பிரபல தொழிலதிபர் ஹர்ஷ்வர்தன் நியோடியா இவர் மேற்குவங்கம் ‘தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள தன்னுடைய 30 பங்களாக்களை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்’ என அறிவித்துள்ளார்.
கொரோனா ‘வைரஸ் பாதிப்புள்ளவர்களை தனிமைபடுத்த உள்ளிட்டவற்றுக்கு இந்த பங்களாக்களை பயன்படுத்தலாம்’ என அவர் கூறியுள்ளார். அங்கு தூய்மைப் பணி மற்றும் உணவு வசதியையும் செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இதை அம்மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.