தமிழக திரைப்பட உலகில் அனைவருக்கும் பிடித்த நடிகை தேவயானி. இவர் கன்னடத் தந்தையான ஜெயதேவுக்கும், மலையாள தாயான லட்சுமிக்கும் மகளாக பிறந்தார். இளநிலை கணக்குப்பதிவியல் பட்டம் பெற்றவர். இவருடைய இயற்பெயர் சுஷ்மா.
திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார்.
காதல் கோட்டை மற்றும் சூர்யா வம்சம் படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தமிழ் நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது பெற்றவர்.
நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்தபிறகு அச்சு அசலான தமிழ்நாட்டு மருமகளாக மாறிவிட்டவர்.
இயக்குனர் இப்போது இருவருமே முழுநேர விவசாயி ஆகி இருக்கிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் ராஜகுமாரனின் சொந்த ஊருக்கு அருகேயுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள்.
இங்கு அவர்களுக்கு ஒரு பண்ணை வீடும், அதை சுற்றி 5 ஏக்கரில் விவசாய நிலமும் உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தின் போது குடும்பத்துடன் அங்கு சென்று செட்டிலாகிவிட்டவர்களுக்கு அந்த ஊரும், விவசாயமும் பிடித்து விட அங்கேயே நிரந்தரமாக குடியேறவும் முடிவு செய்து விட்டார்கள்.
என்றாலும் மகள்களின் படிப்பு. சீரியல் நடிப்பு இவற்றின் காரணமாக இங்கும், அங்குமாக மாறி மாறி வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர்களது விவசாய நிலத்தின் அருகே ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் 2 ஏக்கர் விவசாய நிலத்தை பிளாட்டுகளாக விற்பனை செய்ய விளம்பரம் செய்து வந்தது. இதையறிந்த தேவயானி அந்த நிறுவனத்திடமிருந்து 2 ஏக்கர் நிலத்தையும் வாங்கி அதை விவசாய நிலமாக மாற்றி உள்ளார். அதில் தற்போது செண்டு மல்லி பயிரிட்டுள்ளார்.
இயற்கை விவசாயியாக மாறியதுடன் வீட்டுமனையாக இருந்த விளைநிலத்தை மீட்டு அதில் விவசாயம் செய்யும் தேவயானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மேலும் பல நடிகர் நடிகைகள் பிரபலமாவதற்காக படத்தில் கருத்து சொல்லி புரட்சி செய்கிறார்கள். ஆனால் அரசுக்கு வரி கட்டுவதில்லை. வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவிக்கிறார்கள். இவர்கள் மத்தியில் கருத்து சொல்லாமல் களத்தில் இறங்கிய தேவயானி மாட்டார் நடிகர் நடிகைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















