சின்னம் மாறி போட்டியிட்ட விவகாரத்தில் 4 எம்.பி.க்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது, மேலும் கடலூர் திமுக எம்.பி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நெல்லையில் பா.ஜ.க பிரமுகரை தாக்கிய திமுக எம்பி ஞானதிரவியம் மற்றும் அவரது மகன்கள் ஆதரவாளர்கள் என 30 பேர் மீது காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.மேலும் திமுக எம்பி ஞானதிரவியம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நகர்கிறது.
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், திமுக எம்பியுமான கெளதம சிகாமணிக்குச் சொந்தமான ரூ. 8.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை அந்நிய செலவாணி மேலாண்மைச் சட்டத்தின் அடிப்படையில் முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி விதிகளுக்குப் புறம்பாக வெளிநாடுகளில் சொத்து சேர்த்தது தொடர்பாக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்நிய செலவாணி விதிகளை மீறி வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. எனவே இவரின் பதவி பறிக்க வாய்ப்புகள் அதிமாக உள்ளது.
2 ஜி வழக்கு நடந்து வரும் அதேநேரத்தில் 1999 முதல் 2010 வரை எம்பியாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த காலகட்டத்தில் ஆ.ராசா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக 28 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக இன்னொரு வழக்கும் தொடுக்கப்பட்டது. இதில் தப்புவது சற்று கடினம் .
மேலும் 2 ஜி வழக்கு இன்னும் 6 மாததத்தில் தீர்ப்பு வந்தால் கனிமொழி அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோயிவிடும். ஆக மொத்தம் தமிழகத்தில் உள்ள 9 பாராளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல்கள் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்கவேண்டும் என்று பாஜக போராட்டம் நடத்தியது. 10 நாட்களுக்குள் கோவில்களை திறக்கவிட்டால் திமுக அரசினை ஸ்தம்பிக்க வைப்போம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
அடுத்த அதிரடியாக திமுகவினர் செய்யும் அட்டூழியங்கள் அதிகமாகி வருவதாகவும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக ஆளுநரிடம் புகார் மனுவை அளித்தது பாஜக
இந்த செய்திகள் வர தொடங்கியதிலிருந்து திமுக வட்டாரம் சற்று நிலை குலைந்தது.உடனே ஆளுநரை சந்தித்தார் முதலவர் ஸ்டாலின். அடுத்த நாள் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க உத்தரவிட்டார். சமூக வலைத்தளங்களில் பாஜகவிற்கு கட்டுப்பட்டது தி.மு.க என வைரலானது.
இதை திமுக பொறுத்துக்கொண்டாலும் திமுகவின் கூட்டணிக்கட்சிகளால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை, பாஜக வளர்ந்து வருகிறது என்பதை நிரூபித்தது கோவில் சம்பவம். இந்த நிலையில் தான் பிரதமர் மோடி குறித்து பொய்யான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி வந்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்த்த சீரியல் நடைக்கை ஷர்மிளாவுக்கு பதிலடி தரும் விதத்திலும், கவிஞர் கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகத்தை சுட்டி காட்டி கருத்து தெரிவித்து வந்த பா.ஜ.கவை சேர்ந்த கல்யாண ராமன், திமுக தருமபுரி எம்பி செந்தில்குமார் கொடுத்த புகாரின் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது சம்பவம் சமூக வலைத்தளங்களில் பா.ஜ.கவினரை கட்டுப்படுத்தவும் தி.மு.க எம்.பி களின் குற்றச்செயல்களை மறைக்கவும் கல்யாண ராமன் கைது நடவடிக்கை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.