திமுக கையெழுத்து வாங்கியதில் வெறும் 5000 பேரிடம் மட்டும் கோர்ட்டில் விசாரனை நடத்தி பாருங்க

கனம் கோர்ட்டார் அவர்களே உண்மையிலேயே பா.ஜ.க CAA பற்றி விளக்கம் அளிக்க தயாராக இருப்பது உண்மையானால்..

திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்து போட்டு அனுப்பப்பட்ட படிவங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க வைத்து, உச்சநீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அதில் கையொப்பமிட்டவர்களில் குறைந்தபட்சம் 5000 பேரை ரேண்டமாக தேர்ந்தெடுத்து சம்மன் அனுப்பி கோர்ட்டுக்கு வரவழைத்து குறுக்கு விசாரணை செய்து அவர்களின் எதிர்ப்புக்கான காரணத்தை விளக்கும்படி கேட்டு அவர்களது கேள்வியில் சாராம்சம் இருக்குமாயின், CAA வை ரத்துசெய்யவும், அப்படி அவர்களுக்கு விளக்கம் சொல்ல தெரியாமலோ…

ஏதோ நிர்பந்தத்தில் கையொப்பம் இட்டேன் என்று கூறினாலோ..

மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை தவறான முறையில் திசைதிருப்பி நாட்டுக்கு எதிராக தூண்டியவகையில் திமுகவின் மீதும் அதன் கூட்டணி என்ற பேரில் ஆதரவு தெரிவித்து செயல்பட்ட அனைத்து கட்சி தலைவர்கள் மீதும் தேச துரோக வழக்கு பதிய செய்து அவர்களின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்து இனி தேர்தல்களில் அவர்கள் வாக்களிக்கவோ, நிற்கவோ தகுதியற்றவர்களாக அறிவித்து .

இந்திய இறையாண்மையை பாதுகாக்க வேண்டும்.

இது ஒரு வலதுசாரி சிந்தனையாளர்களின் கோரிக்கை ஆகும்.

Exit mobile version