Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

கொரோனா அவசரகால நடவடிக்கைக்கு ரூ.15,000 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Oredesam by Oredesam
April 23, 2020
in இந்தியா, கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
கொரோனோ கருவி ஏமாற்றிய சீனா ! எச்சரிக்கை விடுத்த ஸ்பெயின் !
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் கோவிட்-19 அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார அமைப்பு தயார்நிலை தொகுப்பு”க்கு ரூ.15,000 கோடி மதிப்பிலான கணிசமான முதலீடுகளை ஒதுக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதி மூன்று கட்டங்களாக உபயோகப்படுத்தப்படும். உடனடி கோவிட்-19 அவசரகால நடவடிக்கைக்காக ரூ.7,774 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தொகை நடுத்தரக்‍கால ஆதரவுக்கு (1-4 ஆண்டுகள்) பணி பயன்முறை அணுகு முறையின் கீழ் வழங்கப்படும்.

நோய் கண்டறிதல் மற்றும் பிரத்யேக கோவிட் சிகிச்சை வசதிகள் மூலம் கோவிட்-19 பரவலை மெதுவாக்கி கட்டுப்படுத்த அதிகரிக்கப்பட்ட அவசரகால நடவடிக்கை, பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவைப்படும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை மையப்படுத்தப்பட்ட முறையில் வாங்குதல், எதிர்கால நோய் பரவல்கள் தடுப்பு மற்றும் தயார்நிலைக்கு உதவ‌ நெகிழ்வுத்தன்மை உடைய தேசிய மற்றும் மாநில சுகாதார அமைப்புகளை நிறுவதல், ஆய்வகங்களை அமைத்தல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துதல், உயிரி‍ பாதுகாப்பு தயார்நிலை, பெரும்தொற்று ஆராய்ச்சி மற்றும் சமூகங்களை திறம்பட பங்கேற்க செய்து ஆபத்து தொடர்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவை இந்த தொகுப்பின் முக்கிய நோக்கங்களாகும். இந்த இடையீடுகளும் முயற்சிகளும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் மட்டுமே செயல்படுத்தப்படும்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

முதல் கட்டத்தில், தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களின் ஆதரவோடு இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஏற்கனவே மேற்கொண்டுள்ளது:

i) ஏற்கனவே உள்ள சுகாதார வசதிகளை, பிரத்யேக கோவிட் மருத்துவமனைகள், பிரத்யேக கோவிட் சுகாதார‌ மையங்கள் மற்றும் பிரத்யேக கோவிட் சிகிச்சை மையங்களாக மாற்ற ரூ.3,000 கோடி கூடுதல் நிதி, மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு தொகுப்பின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது. தடுப்புக்காப்பு, தனிமைப்படுத்துதல், பரிசோதனை, சிகிச்சை, நோய் தடுப்பு, தூய்மைப்படுத்தல், சமூக இடைவெளி மற்றும் கண்காணிப்பு குறித்த வழிகாட்டுதல்கள், நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. நோய் பரவல் அதிகமாக உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு தடுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ii) நோய் கண்டறியும் ஆய்வகங்களின் வலைப்பின்னல் விரிவுப்படுத்தப்பட்டு, நமது பரிசோதனை திறன் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஏற்கனவே இருக்கும் பல-நோய் பரிசோதனை தளங்களை பயன்படுத்தி, கோவிட்-19 பரிசோதனைக்காக 13 லட்சம் பரிசோதனைக் கருவிகளை வாங்குவதற்கான உத்தரவுகள் அளிக்கப்பட்டுள்ளன.

iii) ‘பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டம்: கோவிட்-19 தொற்று எதிர்த்து போராடும் சுகாதார பணியாளர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில்’ சமுக சுகாதார பணியாளர்கள் (ஆஷா) உட்பட அனைத்து சுகாதார பணியாளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். தனிநபர் பாதுகாப்பு உபகரணம், எண்95 முகக்கவசங்கள் மற்றும் வென்டிலேட்டர்கள், பரிசோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான மருந்துகள் மையப்படுத்தப்பட்ட முறையில் வாங்கப்படுகின்றன.

வலுவான அவசரகால நவடிக்கையை அதிகப்படுத்துதல், தேசிய மற்றும் மாநில சுகாதார அமைப்புகளின் பல‌ப்படுத்துதலை தொடர்ந்து பெரும்தொற்று ஆய்வு மற்றும் ஒரே சுகாதாரத்துக்காக‌ பல்துறை தேசிய நிறுவனங்கள் மற்றும் தளங்களை வலுப்படுத்துதல், சமூக செயல்பாடு, ஆபத்து பற்றிய தொடர்புகள் மற்றும் நடைமுறைப்படுத்துதல், மேலாண்மை, திறன் கட்டமைத்தல், கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு கூறு ஆகியவற்றுக்காக இந்த செலவுத் தொகையின் பெரும் பங்கு பயன்படுத்தப்படும். அவ்வப்போது எழும் அவசர நிலைமைக்கேற்ப, பல்வேறு நடைமுறைப்படுத்தும் முகமைகளுக்கிடையே (தேசிய சுகாதார ஆணையம், மத்திய கொள்முதல், ரயில்வே, சுகாதார ஆராய்ச்சி துறை/இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை, தேசிய நோய் தடுப்பு மையம்) இந்த தொகுப்பின் கூறுகளை ஆராய்ந்து நிதியை உரிய வகையில் மறுஒதுக்கீடு செய்ய‌ சுகாதாரம் குடும்ப நல அமைச்சகத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஒற்றுமையை பேசாமல் ஒன்றியம் பேசுவதா?  தி.மு.கவிற்கு பாடம் கற்பித்த அண்ணாமலை ஐ.பி.எஸ்

23-ஆம் புலிகேசி படம் பார்ப்பது போல உள்ளது தி.மு.கவின் சட்டசபை-அண்ணாமலை தரமான செய்கை!

September 8, 2021
Israel plans 'laser wall

எதுவா இருந்தாலும் ஒரே நொடி.. மொத்தமாக காலி ! அதிநவீன லேசரை கையில் எடுத்த இஸ்ரேல்! டீல் போட்ட இந்தியா! மொத்தமாக மாறிய களம்!

June 6, 2025
சமூக நீதியை நிலைநாட்டிய மோடி அரசு! அகில  27% OBC பிரிவினருக்கு ஒதுக்கீடு! சொந்தம் கொண்டாட கிளம்பிய தி.மு.க!

மருத்துவக் கல்வியில் புரட்சி செய்த பிரதமர் மோடி! பிரதமர் மோடியை போற்றுவோம்! கொண்டாடுவோம்!

August 5, 2021
Vanathi Srinivasn

மோடி போட்டோ : சில்லறைதனமாக ஈடுபடும் தி.மு.க அரசை கிழித்து தொங்க விட்ட வானதி சீனிவாசன்..!

January 27, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x