பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஜூலை 7 அல்லது பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு பின் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.தற்போது பிரதமா் மோடியைத் தவிர மொத்தம் 53 மத்திய அமைச்சா்கள் உள்ளனா். இந்த எண்ணிக்கையை 81 வரை அதிகரிக்கலாம்.
ஐக்கிய ஜனதா தளம் அப்னா தளம் என்று கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் பங்கேற்க இருப்பது நல்ல விசயம் தான்அமைச்சரவையில் சிவசேனா ஒய்.எஸ்.ஆ ர் காங்கிரஸ் பங்கேற்க இருக்கிறார்கள் என்று பேச ஆரம்பித்துள்ளார்கள். அதற்கு சத்திய கூறுகள் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் தற்போது மகாராஷ்டிர அரசு சூழ்நிலையை பார்க்கும் போது எதுவும் நடக்கலாம் என்றே தோன்றுகிறது.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்ற தகவல் கடந்த சில வாரங்களாக பரவி வரும் நிலையில், பிரதமா் மோடியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், பாஜக பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷும் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனா்.
இந்தச் சந்திப்பின்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துக்கு இறுதிவடிவம் அளிக்கப்பட்டதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து எந்தஒரு அதிகாரபூா்வ தகவலும் வெளியாகவில்லை.
குறைந்தது 25 க்கும் மேற்பட்டவர்கள் புதிய அ மைச்சராக பதவியேற்க இருக்கிறார்கள் ்இதில் ஜோ திர் ஆதித்ய சிந்தியா நாராயண ரானேஅனுப்பிரியா படேல் சுசில் மோடி சர்போனந்த சொனாவால் திலீப் கோஷ் என்று பல மாநிலங்களில் சேர்ந்தவர்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.ஆனால் தமிழகத்தில் இருந்து அமைச்சராக இருக்கிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் இணை அமைச்சருக்கு வாய்ப்புகள் உள்ளது. என தெரிவித்தாலும் தமிழக பாஜகவும் முயன்று வருகிறது. பொன்னார், அண்ணாமலை ,வினோஜ் போன்றவர்கள் டெல்லியில் முகாமிட்டு முயற்சிகள் செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அமைச்சர்கள் அனைவரும் ப்யூஸ்கோயல் மாதிரி இருந்துவி ட்டால் அமைச்சரவை மாற்றமே இருக்கா து.தென் இந்தியாவில்ஆந்திரா தெலுங்கானாவில் இருந்து தலா ஒருவர் அமைச்சராக இருக்கிறார்கள்.தமிழகத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புகள் அதிகம் ஆனால் அது அதிமுகவிற்கா இல்லை பாஜகவிற்கா என்பது தெளிவாக தெரியவில்லை. அதிமுகவிற்கு தான் வாய்ப்புகள் அதிகம் என்கிறது பாஜக வட்டாரங்கள். ஏனென்றால் கோவையில் அ.தி.மு.க பா..ஜக வலுப்பெற்றுள்ளது. வடக்கு மாவட்டம் ராமதாஸ் கூட்டணி உள்ளது. அதே போல் தென் மண்டலங்களில் இந்த கூட்டணி வலு பெறுவதற்கு தேவர் சமுதாய ஓட்டுகள் தேவைப்படும். அதன் காரணமாக தேவர் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் வழங்கப்படும்.அதே போல் எடப்பாடி அவர்களின் கையும் ஓங்குவது குறைவாக இருக்கும்.