தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி! கேபிள் தொலைக்காட்சி நிறுவன சட்டம் திருத்தம்!

கேபிள் தொலைக்காட்சி நிறுவன சட்டம், 1995-ல் குறிப்பிட்டுள்ளவாறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் குறித்த மக்களின் குறைகள்/புகார்களை தீர்த்து வைப்பதற்கான சட்டப்பூர்வ வழிமுறையை வழங்குவதற்காக, கேபிள் தொலைக்காட்சி நிறுவன விதிகள், 1994 திருத்தப்பட்டதற்கான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

  1. நிகழ்ச்சிகள்/விளம்பர விதிமீறல் குறித்த பொதுமக்களின் குறைகளை விதிகளின் படி தீர்க்க அமைச்சகங்களுக்கிடையேயான குழு மூலமான வழிமுறை தற்போது உள்ளது. அதே போன்று, குறைகளை தீர்ப்பதற்கான சுய கட்டுப்பாட்டு வழிமுறை ஒன்றை பல்வேறு ஒளிபரப்பு நிறுவனங்கள் தங்களுக்குள் உருவாக்கியுள்ளன.

இருந்தபோதிலும், குறைதீர்ப்பு முறையை வலுப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ வழிமுறையை வலுப்படுத்துவதற்கான தேவை உணரப்பட்டது. “பொது காரணம் Vs இந்திய ஒன்றியம் & மற்றவர்கள்” வழக்கில் உத்தரவு எண் WP(C) No.387 of 2000-ல் மத்திய அரசால் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள வழிமுறை குறித்து திருப்தி தெரிவித்த மாண்புமிகு உச்சநீதிமன்றம், குறைதீர் செயல்பாட்டை முறைபடுத்துவதற்கு முறையான விதிகளை வகுக்குமாறு அறிவுறுத்தியது.

பா.ஜ.க மூத்த தலைவர் அலுவலகத்தில் ஏற்பட்ட மர்ம தீ விபத்து ! காரணம் என்ன ?
  1. இந்த பின்னணியில், வெளிப்படைத்தன்மை மிக்க வகையில், பொதுமக்களுக்கு பலனளிக்கும் விதத்தில், சட்டப்பூர்வ வழிமுறையை வழங்குவதற்காக கேபிள் தொலைக்காட்சி நிறுவன விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
  2. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அனுமதியுடன் 900-க்கும் மேற்பட்ட தொலைகாட்சி சேனல்கள் தற்போது உள்ளன. கேபிள் தொலைக்காட்சி நிறுவன விதிகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிகழ்ச்சி மற்றும் விளம்பர விதிகளை இவை பின்பற்ற வேண்டும். குறைகளை தீர்ப்பதற்கான வலுவான அமைப்பு முறைக்கு வழிவகுப்பதாலும், ஒளிபரப்பு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் சுய ஒழுங்குமுறை அமைப்புகள் மீது பொறுப்பை சுமத்துவதாலும், மேற்கண்ட அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
பியூஷுக்கு போன் செய்து நச்சுனுகேள்வி கேட்ட அண்ணாமலை Annamalai Bjp
Exit mobile version