தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. மேலும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தமிழகம் தற்போது மூழ்கி உள்ளது 15 நாட்களுக்கு மேல் வெள்ள நீர் வடியாமல் மக்கள் தத்தளித்து வருகிறார்கள்.
தொடர் மழையால் சாலைகள் எல்லாம் ஆறுகளாக மாற, சாலையோரம் வசிக்கும் மக்களில் பலர் இருக்கவே இடம் தேடி அலையும் அவல நிலை உருவாகியுள்ளது.சாலையோரம் வசிப்பவர்களில் மிகப்பெரும்பாலோர் தினக்கூலிகளே. மழை காரணமாக கிடைத்த சொற்ப வருமானத்திற்கும் வழியின்றி போய்விட்டது. அடிப்படை தேவைகளான உணவு, உறைவிடம், வருமானம் இன்றி தவித்துக்கிடக்கும் இவர்களுக்கு நிரந்தர இருப்பிடமும், அடிப்படை வாழ்வாதாரத்திற்கான வேலையையும் உறுதிப்படுத்துவதே தீர்வாக அமையும்.அரசு இவர்களை கண்டுகொள்ளுமா ? என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.
ஆளும் திமுக அரசின் நிவாரண நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என மக்களே குற்றம் சாட்டி வருகிறார்கள். முதல்வர் அவர்களும் மழை நீர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்கிறார் ஆய்வு செய்கிறார் டீ சாப்பிடுகிறார்,செல்பி எடுக்கிறார்.. ஆனால் மழை நீர் வடிந்தபாடில்லை.
முதல்வர் ஸ்டாலின் நிவாரண நடவடிக்கைகள் குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். தற்போது வெளிவந்துள்ள மாநாடு படத்தில் வந்தான்…சுட்டான்… ரீப்பீடு என ஓரு பேமஸ் டயலாக்தற்போது முதல்வர் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது.. அந்த டயலாக்கை வைத்து ஸ்டாலினை கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.
மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதல்வரை மாநாடு பட ஸ்டைலில் விமர்சித்துள்ளார். பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் எப்படிச் செய்வது, மறுவாழ்வு மையத்தை எப்படி நடத்துவது என திமுக அரசுக்கு தெரியவில்லை. அது தொடர்பாக திமுகவினர் எங்களிடம் கேட்டு மக்களுக்கு அந்தப் பணிகளை செய்யட்டும். முதல்வர் கோட்டு போடுவது ரிப்பீட்டு, டீ குடிப்பது ரிப்பீட்டு, நடந்துபோவது ரிப்பீட்டு, கோட்டு கழட்டுவது ரிப்பீட்டு என முதல்வர் இருக்கிறார். இந்த ரிப்பீட்டு பணிகளையே முதல்வர் தொடர்ந்து செய்து வருகிறார். மக்களுக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதையும் அவர் செயல்படுத்தவில்லை” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















