தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.ராமேஸ்வரத்தில் தொடங்கிய முதற்கட்ட நடைபயணம் திருநெல்வேலியில் முடிவடைந்தது.
முதற் கட்ட நடைபயணத்தில் சுமார் 41 தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அண்ணாமலை அண்ணாமலையின் நடை பயணத்திற்கு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் முதல் கட்ட பயணம் இன்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை அமைச்சர் உதயநிதி ஆளுநருக்கு சவால் விடுத்ததற்கு எதிர்கருத்து தெரிவிக்கும் விதமாக, “உதயநிதி யு.பி.எஸ்.சி-யில் முதல்நிலைத் தேர்வில் பாஸ் செய்யட்டும். நான் அரசியலை விட்டே ஒதுங்கிவிடுகிறேன்” என நேரடி சாவல் விடுத்துள்ளார்.
நீட் தேர்வு விலக்கிற்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய அரசையும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியையும் கண்டித்து திமுகவின் அணிகள் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது .
சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் உதயநிதி கலந்துகொண்டு பேசுகையில் ஆளுநருக்கு நான் சவால் விடுகிறேன். நீங்கள் உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் ஏதோ ஒரு தொகுதியில் தேர்தலில் நிற்க முடிவு செய்யுங்கள். என ஆளுநருக்கு எதிராக பேசினார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில் நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது. அமைச்சர் உதயநிதிக்கு எதை பேச வேண்டும் எதை பேசக் கூடாது என தெரியவில்லை. ஆளுநர் தேர்தலில் நிற்க முடியுமா என கேட்டார்.
நான் கேட்கிறேன் , ஆளுநர் ஆர்.என்.ரவியை தேர்தலில் போட்டியிட சொல்லும் உதயநிதியால் குரூப் 4 தேர்வெழுத முடியுமா?மேலும் நீட் தேர்வு ரத்து மசோதாவை ஜனாதிபதி ஏற்காமல் திருப்பி அனுப்பிவிட்டால் ஜனாதிபதியை தேர்தலில் போட்டியிட சொல்வாரா உதயநிதி.
நான் பாஜக மாநில தலைவராக இருந்தாலும் என்னை விட சீனியரான பொன்னார் அண்ணன் இன்று வரை நான் இப்படி பேச வேண்டும். இப்படி பேசக் கூடாது என அறிவுறுத்துவார். இதை நான் வரவேற்கிறேன். எனவே உதயநிதியும் எப்படி பேச வேண்டும் என கற்றுக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போல் உதயநிதி பேசக் கூடாது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.