சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் செயல்பட இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட வேண்டும் என்றார்கள். மேலும் இதே போல் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளுக்கு அந்த நிறுவனங்கள் தான் பொறுப்பு என புதிய சட்ட விதிகளை விதித்தது மத்திய அரசு.மேலும் திரைத்துறைக்கு புதிய சட்டதிருத்தத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு
இந்தியாவில் சமூகவலைதளைங்கள் தொடங்கி தொலைக்காட்சி நிறுவனங்கள் திரைப்படம் வரை சட்ட திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது. வெளி நாடுகளில் இருந்து பணம் வாங்கி கொண்டு இந்தியாவை பற்றியும் அரசாங்கத்தை பற்றியும் தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வந்தார்கள். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் உலா வரும் சில தேச தேசத்திற்கு எதிராக செயல்படகூடியவர்கள். இதனால் சாதி மத கலவரம் தூண்டும் வகையிலும் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்து வந்தது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்தியாவின் இறையான்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரான கருத்துகளை உள்ளடக்கிய வசனங்கள் இனி எந்த ஒரு திரைப்படங்களில் இருந்தாலும் அதனை மத்திய தணிக்கை குழுவிற்கு அனுப்பி அந்த சினிமாக்களை தடை செய்யும் விதமாக இந்திய சினிமாட்ட கிராப் சட்டவி தியான 52 வது பிரிவில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு
மத்திய அரசிற்கு எதிராக தொடக்கத்தில் இருந்தே நடிகர் சூர்யாவின் குடும்பம் குரல் கொடுத்து வருகிறது. ஏன் என்று தான் புரியவில்லை நீட்டிற்கு எதிராக பல்வேறு சூர்யா பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார். கோவில்கள் பற்றி நடிகை ஜோதிகா பேசியது கோவில் கட்டும் செலவிற்கு மருத்துவமனைகள் கட்டலாம் என உணர்ச்சி பொங்கிய ஜோதிகா தமிழகத்தில் 2500 கோடி ரூபாயில் அமைக்கப்படும் பூங்காக்களுக்கு பதிலாக மருவத்துவமனை கட்டலாம் என பொங்கவில்லை.
ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக நடிகர்கள் சூர்யா, கார்த்தி தொடக்கத்தில் இருந்தே இந்த சட்டத்திற்கு தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள். கார்த்தி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இந்த சட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.இந்த சந்திப்பிற்கு பின் பேசிய கார்த்தி, தமிழ்நாடு அரசு போலவே “ஒன்றிய” அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தி பேட்டி கொடுத்தார். ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டம் மிகப்பெரிய ஆபத்து கொண்டது. என குறிப்பிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது
நடிகர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக மக்கள் அவர்களை கூத்தாடி என்று அழைத்தால் அவர்கள் ஏன் கோபப்படுகிறார்கள்? இரண்டு சொற்களுக்கும் பொருள் ஒன்றுதான். நடிகர் சங்கத்திற்கு பதிலாக, இதை நாம் கூத்தாடி சங்கம் என்று அழைக்கலாமா? அவரைப் போன்ற நன்கு படித்த மனிதனுக்கு புரிதல் மிகக் குறைவு
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















