திருச்சியில் தற்போது கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த கோரி மக்கள் காவல் துறை முதல் கலெக்டர் வரை புகார் அளித்துள்ளார்கள். மேலும் கஞ்சாவால் இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது. குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி முக்கிய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கஞ்சா கடத்தி வருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்து.
திருச்சி புறநகரில் பகுதியில் கஞ்சா விற்பனை விமான நிலையம் பகுதியில் உள்ள இளவரசன் நகரைச் சேர்ந்தவர் முகமது அனீபா(42). இவர் மன்னார்புரம் பகுதிக்கு கஞ்சாவை கடத்தி வருவதாக மாநகர காவல் ஆணையரின் தனிப்படை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து துணை ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான தனிப்படைகாவல்துறையினர், மன்னார்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள் . சோதனையின் போது அந்த வழியாக வேகமாக வந்த காரினை நிறுத்தினார்கள். ஆனால் அந்த கார் நிறுத்தாமல் வேகமாகஅந்த இடத்தை கடந்தது. அந்த காரில் சென்றது முகமது அனீபா என்பது காவல்துறைக்கு தெரிய வந்தது.
இதனைதொடர்ந்து தனிப்படை காவல் துறையினர் , இருசக்கர வாகனங்களில் அந்த கஞ்சா கடத்தி சென்ற முகமது அனீபா காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். செந்தண்ணீர்புரம்- பழைய பால்பண்ணை சந்திப்புக்கு இடைப்பட்ட பகுதியில் சென்றபோது, தலைமைக் காவலர் சரவணன் தனது இருசக்கர வாகனத்தில் அனீபாவின் காருக்கு முன் சென்றுகாரினை மறித்தார். ஆனால் முகமது அனீபா காரை நிறுத்தாமல் கொலைவெறியுடன் , சரவணன் மீது காரை மோதிவிட்டு தப்பிச்செல்ல முயன்றார். சுதாரித்து கொண்ட தனிப்படை காவலர் சரவணன் காரின் முன்பகுதியில் விழுந்து பேனட்டினை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, ஆரம்பம் பட பாணியில் காரை நிறுத்துமாறு கூறினார். ஆனாலும், முகமதுஅனீபா காரை நிறுத்தாமல்கொலை வெறியுடன் தொடர்ந்து வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது, சரவணனின் ஒருகால் தரையில் உரசியபடி சென்றதால், அவருக்கு பலத்த காயம்ஏற்பட்டது. ஆனாலும் முகமதுஅனீபா அதைக் பற்றியெல்லாம் கவலைப்படவில்லைசுமார் 2 கி.மீ தூரத்துக்குப் பிறகு, சஞ்சீவி நகர் சந்திப்பு பகுதியில் டிராபிக் ஜாம் ஏற்பட்டதால் கார் மெதுவாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தனிப்படைகாவலர் , காரின் பக்கவாட்டு ஜன்னலுக்குள் கையைவிட்டு, சாமர்த்தியமாக காரை நிறுத்தினர்.
பின்னர் காலில் பலத்த காயமடைந்த சரவணனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்தபோது காலில் சதைப் பகுதி ஆழமாக சேதமடைந்திருந்ததால், பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு செய்யப்பட்டது. தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் அ.அருண் உடனடியாக தனிப்படை காவலர் சரவணனை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் துணை ஆணையர் சக்திவேல், நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குசென்று சரவணனைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதற்கிடையே பொதுமக்களின் உதவியுடன் காரில் இருந்த அனீபாவை தனிப்படை போலீஸார் மடக்கிப் பிடித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது காரில் இருந்து சுமார் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.