இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,460 ஆகக் குறைந்துள்ளது. இதையடுத்து, தொடர்ந்து 10-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் இரண்டு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது. நம் நாட்டில் கொவிட் தொற்றுக்குத் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக சரிந்து, தற்போது 14,77,799 ஆக உள்ளது. இது, நாட்டில் ஏற்பட்ட மொத்த பாதிப்பில் வெறும் 5.13 சதவீதமாகும். இந்த எண்ணிக்கை 6-வது நாளாக 20 லட்சத்திற்கும் குறைவாக ஏற்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=Om2ie10Gu-E&t=15s சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 77,449 சரிந்துள்ளது. தொடர்ந்து 24-வது நாளாக புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,89,232 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்களை விட கூடுதலாக 74,772 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 2,69,84,781 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 93.67 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20,36,311 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 36,47,46,522 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. https://www.youtube.com/watch?v=QUscptQNbDw வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 6.54 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி வீதம் 5.62 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 13 நாட்களாக இந்த எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 23.13 கோடி தடுப்பூசிகளும், கடந்த 24 மணி நேரத்தில் 33,53,539 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 32,42,503 முகாம்களில் 23,13,22,417 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
மாரிதாஸ், மதுரையைச் சேர்ந்தவர். ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். இவர் வலதுசாரி சிந்தனையாளர் . பல உண்மைகளை தைரியத்துடன் சொல்லி வருகிறார். மேலும் இவரின் கருத்துக்கள் பல...
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மற்றும் தற்போது பயமுறுத்தி வரும் கருப்பு பூஞ்சை தொற்றைக் கருத்தில் கொண்டு மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம், மதுரை ஸ்ரீ மீனாட்சி...
கொவிட்-19 தொற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கு உதவும் வகையில் ஊடுகதிர் (எக்ஸ்ரே) இயந்திர வசதிகள் கொண்ட மருத்துவர்கள், வாட்ஸ்அப் செயலி வாயிலாக மார்பு ஊடுகதிர் அறிக்கையைப் பெறுவதற்கு, ஒரு...
பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் வழங்கும் இந்திய ரயில்வே, இதுவரை 1,405 டேங்கர்களில் 23,741 மெட்ரிக் டன் பிராணவாயுவை தமிழகம் உள்ளிட்ட...
நாட்டில் தினசரி கொவிட் பாதிப்பு மேலும் குறைந்து 1.27 லட்சமாகியுள்ளது; தினசரி கொவிட் பாதிப்பு, கடந்த 54 நாட்களில் மிகக்குறைவு; புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது....
வலிமை_அப்டேட் நண்பர் ஒருவர் நேற்று போன் பண்ணினார். அவரது நண்பர் ஒருவரின் உறவினர் கோயம்புத்தூரில் இருக்கிறாராம். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறாராம். வயது 44 தான்.ஆக்ஸிஜன் லெவல் - 86....
கொரோனா 2 ம் அலை நாட்டில் அதி தீவிரமாக பரவி வந்த நிலையில் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்தார்கள். பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிலை கவலைக்குள்ளாகி...
கோவைக்கு வர வேண்டாம் ஸ்டாலின் திரும்பி போங்க ட்விட்டரில் அடிச்சு தூக்கும் கோ பேக் ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இருந்தும், கோவை புறக்கணிக்கப்பட்டது. தடுப்பூசி...
நாட்டில் இதுவரை வழங்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பு மருந்து டோஸ்களின் எண்ணிக்கை 20.86 கோடியை (20,86,12,834) கடந்துள்ளதாக இன்று மாலை 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கை தெரிவிக்கிறது. 18 முதல் 44 வயதுடைய 13,36,309 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியை...