இந்தியா

Get real time update about this post category directly on your device, subscribe now.

சீனாவை புறக்கணிக்கத் தொடங்கிய இந்தியர்கள்! 43% இந்தியர்கள், சீன பொருட்களை புறக்கணித்துள்ளனர்!

சீனாவை புறக்கணிக்கத் தொடங்கிய இந்தியர்கள்! 43% இந்தியர்கள், சீன பொருட்களை புறக்கணித்துள்ளனர்!

கடந்த 12 மாதங்களில் 43% இந்தியர்கள், சீன பொருட்களை புறக்கணித்துள்ளனர்!லடாக்கில் (Ladakh) உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் (Galwan Valley) இந்திய மற்றும் சீன படையினருக்கு இடையிலான மோதல்...

கலவரத்தை தூண்டும் வகையில் பொய் செய்தியை பரப்பிய முகமது ஜுபேர்! ட்விட்டர் மீது FIR. உ.பி அரசு அதிரடி!

கலவரத்தை தூண்டும் வகையில் பொய் செய்தியை பரப்பிய முகமது ஜுபேர்! ட்விட்டர் மீது FIR. உ.பி அரசு அதிரடி!

சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிகளை மத்திய அரசு வருகுது செயல்படுத்தியது .இந்த ட்விட்டர் மட்டும் பிடிவாதமாக அரசின் சட்ட திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம் என ஆடம்...

தமிழகத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.3,691 கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு.

தமிழகத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.3,691 கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு.

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க மத்திய அரசு  ரூ.3,691 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டில் தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை ரூ.3,691 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ.921.99 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=xXYdslnBULA ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய ஜல் ஜீவன் திட்டம் தமிழகத்துக்கு முதல் தவணையாக ரூ.614.35 கோடியை வழங்கியுள்ளது. தமிழகத்துக்கு ஜல்ஜீவன் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை 4 மடங்கு உயர்த்த ஒப்புதல் அளித்துள்ள ஜல்சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங், 2024ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தமிழகத்துக்கு முழு உதவியும் அளிக்கப்டும் என உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.26 வீடுகளில், 40.36 லட்சம் வீடுகளுக்கு (31.80 சதவீதம்) குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்த திட்டம் தொடங்கியபோது, 21.65 லட்சம் (17.06 சதவீதம்) வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கடந்த 22 மாதங்களில் 18.70 லட்சம் (14.74 சதவீதம்) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இன்னும் 86.53 லட்சம் வீடுகள்  குடிநீர் குழாய் இணைப்பு இல்லாமல் உள்ளன. இந்தாண்டில் 16.13 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மீதமுள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது மிகப் பெரிய பணியாக இருக்கும். 2024ம் ஆண்டுக்குள் இந்தப் பணியை முடிக்க, கிராமங்கங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதை தமிழகம் 179 சதவீதம் அதிகரிக்க வேண்டும். இந்தாண்டுக்கான செயல் திட்டத்தை தமிழகம் இன்னும் இறுதி செய்யவில்லை. இதை தாமதிக்காமல் இறுதி செய்யும்படி தமிழக அரசை தேசிய ஜல்ஜீவன் திட்டம் கேட்டுக் கொண்டுள்ளது. https://www.youtube.com/watch?v=zMIbWl1xLhM ஜல்ஜீவன் திட்டம் அமல்படுத்தும் பணியை விரைவுபடுத்தும்படி தமிழக முதல்வருக்கு, ஜல்சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார். 2020-21ம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய ரூ.921.99 கோடியில், தமிழகம் ரூ.544.51 கோடியை மட்டும் பயன்படுத்தியது. ரூ.377.48 கோடியை திருப்பி அளித்தது. இந்தாண்டு 4 மடங்கு அதிகமாக ரூ.3,691 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செலவழிக்காத நிலுவைத் தொகையாக ரூ.377.48 கோடி உள்ளது. 2020-21ம் ஆண்டில்  மாநிலத்தின் பங்களிப்பு பற்றாக்குறையாக ரூ. 290.79 கோடி உள்ளது. 2021-22ம் ஆண்டில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தமிழகத்துக்கு ரூ.8,428.17 கோடி உள்ளது. ஆகையால், இத்திட்டத்துக்கு பணப் பற்றாக்குறை எதுவும் இல்லை. தமிழக முதல்வருக்கு, மத்திய அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டின் மூலம், கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் தமிழகத்தால் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2021-22ம் ஆண்டில், 15வது நிதி ஆணையத்தின் மானியமாக ஊரக உள்ளாட்சி பகுதிகளில் குடிநீர் மற்றும் துப்புரவு பணிக்கு ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.8,436 கோடி உறுதி அளிக்கப்பட்ட நிதி உள்ளது. தமிழக கிராம பகுதிகளில் செய்யப்படும் இந்த மிகப் பெரிய முதலீடு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, கிராம பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்....

மது இல்லா குஜராத் உபரி பட்ஜெட் போடுகிறது!  மதுவால்  30,000 கோடிக்கு மேல் கிடைக்கும் தமிழகம் பற்றாக்குறை பட்ஜெட் போடுகிறது.!

மது இல்லா குஜராத் உபரி பட்ஜெட் போடுகிறது! மதுவால் 30,000 கோடிக்கு மேல் கிடைக்கும் தமிழகம் பற்றாக்குறை பட்ஜெட் போடுகிறது.!

வரும் 14 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மறுநாளான 15 ஆம் தேதி முதல் இரண்டாவது தவணையாக ரூ 2,000...

டிரைவிங் லைசன்ஸ் பெற நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை எளிய முறையில் கிடைக்க புது திட்டம்

டிரைவிங் லைசன்ஸ் பெற நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை எளிய முறையில் கிடைக்க புது திட்டம்

அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கான விதிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. https://www.youtube.com/watch?v=7ivFWhWNwCY இந்த விதிமுறைகள் 2021 ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்....

மோடி அரசு மக்கள் நலனை காக்க ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் விலை 54 சதவீதம் வரை குறைப்பு.

மோடி அரசு மக்கள் நலனை காக்க ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் விலை 54 சதவீதம் வரை குறைப்பு.

நாட்டில் நாளுக்கு நாள் ரானா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நோய்த் தொற்றில் கடுமையாக பாதிக்கும் நபர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து இருப்பவர்களுக்கு மிக முக்கியமாக தேவைப்படும்...

இந்தியாவில் டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசிகள்! மக்களுக்கு நம்பிக்கை அளித்த பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா

இந்தியாவில் டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசிகள்! மக்களுக்கு நம்பிக்கை அளித்த பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா

அருணாச்சல பிரேதேசம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தினை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நாட்டா அவர்கள் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த...

நாட்டுக்கும், பா.ஜ.கவிற்கும் உயரிய தலைவர் பிரதமர் மோடி! சிவசேனா புகழாரம்! மஹாராஷ்டிராவில் ஆட்சி மாறுகிறதா?

நாட்டுக்கும், பா.ஜ.கவிற்கும் உயரிய தலைவர் பிரதமர் மோடி! சிவசேனா புகழாரம்! மஹாராஷ்டிராவில் ஆட்சி மாறுகிறதா?

பா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடியின் தலைமையத்துவமே காரணம் என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் சிவசேனாவின் முக்கியத் தலைவருமான சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார். இன்று பிரதமர் மோடியை...

பத்ம விருதுகளுக்கு 2021 செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு அறிவிப்பு.

பத்ம விருதுகளுக்கு 2021 செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு அறிவிப்பு.

2022-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படவிருக்கும் பத்ம விருதுகளுக்கான இணையவழி விண்ணப்பங்கள்/பரிந்துரைகளை 2021 செப்டம்பர் 15 வரை அனுப்பலாம். https://padmaawards.gov.in எனும் தளம் வழியாக மட்டுமே இதை செய்ய முடியும். 1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகியவை ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகள்/சேவைக்காக இவை வழங்கப்படுகின்றன. பத்ம விருதுகளை ‘மக்கள் பத்ம விருதுகளாக’ மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே, சுய விண்ணப்பம் உள்ளிட்ட விண்ணப்பம்/பரிந்துரைகளை செய்யுமாறு அனைத்து மக்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். https://www.youtube.com/watch?v=5XUOnIoYTSY இது குறித்த மேலும் தகவல்களை உள்துறை அமைச்சகத்தின் இணையதளமான www.mha.gov.in-ல் விருதுகள் மற்றும் பதக்கங்கள் எனும் தலைப்பில் காணலாம். விருதுகள் குறித்த விதிமுறைகளை https://padmaawards.gov.in/AboutAwards.aspx எனும் இணைய முகவரியில் காணலாம்.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உணவு தானியங்களின் கொள்முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

வேளாண் ஏற்றுமதியில் இந்தியா கடந்த ஆண்டைவிட சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது.

2020-21ம் ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் இந்தியா சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2020-21ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி சிறப்பாக இருந்ததாக மத்திய வர்த்தகத்துறை செயலாளர் டாக்டர் அனுப் வாதவன் கூறியுள்ளார். அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 3 நிதியாண்டுகளாக தேக்க நிலையில் இருந்த வேளாண் மற்றும் துணை பொருட்களின் ஏற்றுமதி (கடல்சார் பொருட்கள் மற்றும் தோட்ட பொருட்கள் உட்பட) 2020-21ம் நிதியாண்டில் 41.25 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. இது 17.34 சதவீத வளர்ச்சி. 2019-20ம் ஆண்டில், ரூ.2.49 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. 2020-21ம் ஆண்டில் ரூ.3.05 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது 22.62 சதவீத வளர்ச்சி. இந்தியாவின் வேளாண் மற்றும் துணை பொருட்களின் இறக்குமதி கடந்த 2019-20ம் ஆண்டில், 20.64 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2020-21ம் ஆண்டில் இது 20.67 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. கொவிட் தொற்றுக்கு இடையிலும் வர்த்தக சமநிலை 14.5 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 20.58 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது 42.16 சதவீத வளர்ச்சி.  கடல்சார் மற்றும் தோட்ட பொருட்கள்  தவிர இதர வேளாண் பொருட்கள் கடந்த 2020-21ம் ஆண்டில் 29.81 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 28.36 சதவீத வளர்ச்சி. கொவிட்-19 தொற்று காலத்தில், முக்கிய உணவு பொருட்களின் தேவை அதிகரித்ததை, இந்தியா சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. https://www.youtube.com/watch?v=gW2_uspZpgY உணவு தானியங்களின் ஏற்றுமதியும் அதிக வளர்ச்சி கண்டது. பாசுமதி வகை அல்லாத அரிகளின் ஏற்றுமதி மதிப்பு 4794.54 மில்லியன் அமெரிக்க டாலர். இது 136.04 சதவீத வளர்ச்சி. கோதுமை 549.16 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 774.17 சதவீத வளர்ச்சி. கம்பு, சோளம் போன்ற இதர உணவு தானியங்களின் ஏற்றுமதி 694.14 மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 238.28 சதவீத வளர்ச்சி. இதர வேளாண் பொருட்களின் ஏற்றுமதியும், கடந்த 2019-20ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளன. புண்ணாக்கு வகைகள் 1675.34 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 90.28 சதவீத வளர்ச்சி. சர்க்கரை 2789.97 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கும், பருத்தி 1897.20 மில்லியன் அமெரிக்க டாலருக்கும், காய்கறிகள்  721.47 மில்லியன் டாலருக்கும், சமையல் எண்ணெய்  602.77 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சி  254.39 சதவீதம். இந்திய வேளாண்  பொருட்களை அமெரிக்க, சீனா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்நாம், சவுதி அரேபியா, இந்தோனேஷியா, நேபாளம், ஈரான், மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன. இந்த நாடுகளுக்கான ஏற்றுமதி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இந்தோனேஷியாவுடனான ஏற்றுமதி வளர்ச்சி 102.42 சதவீதமாகவும், வங்கதேசத்துடனான வளர்ச்சி 95.93 சதவீதமாகவும், நேபாளத்துடனான வளர்ச்சி 50.49 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது....

Page 79 of 139 1 78 79 80 139

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x