Get real time update about this post category directly on your device, subscribe now.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,460 ஆகக் குறைந்துள்ளது. இதையடுத்து, தொடர்ந்து 10-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் இரண்டு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது. நம் நாட்டில் கொவிட் தொற்றுக்குத் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக சரிந்து, தற்போது 14,77,799 ஆக உள்ளது. இது, நாட்டில் ஏற்பட்ட மொத்த பாதிப்பில் வெறும் 5.13 சதவீதமாகும். இந்த எண்ணிக்கை 6-வது நாளாக 20 லட்சத்திற்கும் குறைவாக ஏற்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=Om2ie10Gu-E&t=15s சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 77,449 சரிந்துள்ளது. தொடர்ந்து 24-வது நாளாக புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,89,232 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்களை விட கூடுதலாக 74,772 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 2,69,84,781 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 93.67 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20,36,311 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 36,47,46,522 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. https://www.youtube.com/watch?v=QUscptQNbDw வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 6.54 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி வீதம் 5.62 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 13 நாட்களாக இந்த எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 23.13 கோடி தடுப்பூசிகளும், கடந்த 24 மணி நேரத்தில் 33,53,539 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 32,42,503 முகாம்களில் 23,13,22,417 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
மத்திய அரபிக் கடல் பகுதி, கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளது என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் கூறியுள்ளது. இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ● தென்மேற்கு பருவமழை, இன்று மத்திய அரபிக் கடல் பகுதி, மகாராஷ்டிராவின் சில பகுதிகள், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திராவின் சில பகுதிகள், வங்காள விரிகுடாவின் மத்தியப் பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மேலும் முன்னேறியுள்ளது. மேற்கு வங்கத்தின் இமயமலைப் பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைந்து வருவதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அதனையொட்டிய கிழக்கு மாநிலங்களில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு பரவலாக மழை இருக்கும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தின் இமயமலைப் பகுதி, சிக்கிம், அசாம் மற்றும் மேகாலயாவின் ஒரு சில இடங்களில் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19-ஐ எதிர்த்து போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு தொகுப்பு காப்பீட்டு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், பிரதமரின் ஜீவன் ஜோதி காப்பீட்டு திட்டத்தின் கீழ்...
2021 மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மொத்த வசூல் ₹ 1,02,709 கோடியாக உள்ளது. இதில் சிஜிஎஸ்டி ₹ 17,592 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி ₹ 22,653 கோடியாகவும், ஐஜிஎஸ்டி ₹ 53,199 கோடியாகவும் (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ₹ 26,002 கோடியாகவும் சேர்த்து) மற்றும் செஸ் ₹ 9,265 கோடியாகவும் (சரக்கு...
தற்போதைய ராபி சந்தைப்படுத்துதல் பருவம் 2021-22-ன் போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கோதுமை கொள்முதல் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 368.45 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை...
36 தீவுகளை உள்ளடக்கியது லட்சத்தீவு. மொத்த பரப்பளவு 32.62 சதுர கிலோ மீட்டர். மாநிலத் தலைநகரம் காவரட்டி. இயற்கை எழில் மிகுந்த லட்சத்தீவில், மொத்தமாக 10 தீவுகளில்...
"ஏற்கனவே இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் ராசி இல்லை என்பதால் தான் புதிய செண்டிரல் விஸ்ட்டா கட்டிடம் கட்டப்படுகிறது" என புரளி கிளப்பி வலைதளங்கள் 'கட்டுரை' வெளியிட, அதை...
பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் வழங்கும் இந்திய ரயில்வே, இதுவரை 1,405 டேங்கர்களில் 23,741 மெட்ரிக் டன் பிராணவாயுவை தமிழகம் உள்ளிட்ட...
இந்திய விமான நிலையங்கள் ஆணையகத்தின் தாராளமயமாக்கப்பட்ட பறக்கும் பயிற்சி நிறுவன கொள்கையின் கீழ் இந்தியாவில் புதிதாக 8 பறக்கும் விமான பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. பெலாகவி, ஜல்காவோன், கலபுரகி, கஜுராஹோ மற்றும் லீலாபாரியில்...
தென்மேற்கு பருவமழை இந்தாண்டு சராசரி அளவில் இருக்கும் என எதிர்பார்ப்பதாக தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அ. நாட்டில் ஜூன்...
