மொழிக் கொள்கை மற்றும் வடக்கு-தெற்கு மாநிலங்களுக்கு இடையே நிலவும் அரசியல் சார்ந்த சிக்கலுக்கு மத்தியில் இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை என ஆந்திர மாநில துணை முதல்வர்...
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான, தி.மு.க., முக்கிய புள்ளி உள்ளிட்ட நான்கு பேரின், 1.59 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு...
புதிய கல்விக் கொள்கையை உள்ளடக்கிய பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், அதற்கான நிதியை, மாநிலங்களுக்கு வழங்க முடியாது' என்றார்; இது தமிழக அரசியலில் பெரும் சூறாவளியை ஏற்படுத்தியது. கடும்...
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலை உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வாரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் இரண்டு நாட்கள் சோதனை மேற்கொண்டு...
நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் நிறைய வழக்குகளில் எதிர் மனுதாரராக அரசுதான் இருக்கிறது. அரசு எடுத்த ஒரு தவறான நடவடிக்கைக்கு நிவாரணம் வேண்டி, அரசு இழைத்த அநீதிக்கு நியாயம் வேண்டி,...
021-22 -ம் ஆண்டில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) நடத்திய காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின்படி, அகில இந்திய தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தின் மதிப்பீடுகள் – மக்கள் தொகையில் தொழிலாளர் சக்தியில் உள்ள நபர்களின் சதவீதமாக வரையறுக்கப்படுகிறது. 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் தொழிலாளிகளாகச் சேர்வது படிப்படியாக அதிகரிப்பதைக் காட்டுகின்றன. 2014-15-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கல்வி பயிலுங்கள் மற்றும் வருவாய் ஈட்டுங்கள் (சீகோ அவுர் கமாவோ) திட்டம், சிறுபான்மை இளைஞர்களின் (14-45 வயது) கல்வித் தகுதி, நிலவும் பொருளாதார போக்குகள் மற்றும் சந்தை வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து பல்வேறு நவீன / பாரம்பரிய திறன்களில் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். இத்திட்டத்தின் கீழ், 2.69 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்றனர். இது மொத்த பயனாளிகளில் 57.64% ஆகும். உஸ்தாத் திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது. முதன்மை கைவினைஞர்கள் / கைவினைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் பாரம்பரிய திறன்களை மேம்படுத்துவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டது. இத்திட்டத்தின் கீழ், 19,255 பெண்கள் பயிற்சி பெற்றனர், இது மொத்த பயனாளிகளில் 89.10% ஆகும். முறையான பள்ளி மாற்றுச் சான்றிதழ் இல்லாத சிறுபான்மையின இளைஞர்கள் பயனடையும் நோக்கத்துடன் நயி மன்சில் திட்டம் 2014-15 முதல் 2020-21 வரை செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் முறையான கல்வி (எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு) மற்றும் திறன்களின் கலவையை வழங்கியது மற்றும் பயனாளிகளுக்கு சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தேட உதவியது. இத்திட்டத்தின் கீழ், 54,233 பெண்கள் பயிற்சி பெற்றனர், இது மொத்த பயனாளிகளில் 54.94% ஆகும். மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சிறுபான்மையினர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), தேசிய மற்றும் சர்வதேச ஒலிம்பியாடில் சிறந்து விளங்குவோருக்கான இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. இவை பல்வேறு பாடங்கள் மற்றும் திறன்களின் அடிப்படையில் மாணவர்களை மதிப்பிடும் சவால்மிக்க போட்டித் தேர்வுகளாகும். ‘அறிவியல் ஒலிம்பியாடில் சிறந்து விளங்குவோர்’ என்ற இப்பிரிவிற்கு 2025-26 கல்வியாண்டு முதல் ஜேஇஇ (அட்வான்ஸ்ட்) கட்டமைப்புக்குள் வராமல் மாணவர் சேர்க்கை நடைபெறும். விளையாட்டுக்கான சிறப்பு மாணவர் சேர்க்கை மற்றும் நுண்கலைகள் மற்றும் கலாச்சாரத்திற்கான சிறப்பு மாணவர் சேர்க்கை ஆகியவற்றைப் போன்று ‘அறிவியல் ஒலிம்பியாட் சிறப்பு’ (ScOpE) மாணவர் சேர்க்கையிலும் ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் மாணவிகளுக்கு பிரத்யேகமாக ஒரு இடம் உள்பட தலா 2 இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும். 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வயது உள்ளிட்ட இதர தகுதி அளவுகோள்கள் அந்தந்த ஆண்டிற்கான ஜேஇஇ (அட்வான்ஸ்ட்)-க்கு இருப்பதைப் போன்றே இருக்கும். விண்ணப்பதாரர்கள் முந்தைய ஆண்டுகளில் எந்தவொரு ஐஐடி-யிலும் மாணவராக சேர்க்கப்பட்டிருக்கக் கூடாது. முதல் பேட்ச்-க்கான விண்ணப்ப பதிவு ஜூன் 3, 2025 முதல் தொடங்கும். அறிவியல் ஒலிம்பியாட் சிறப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டல்கள், அலுவல் விதிமுறைகள் பின்வரும் வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன. - https://ugadmissions.iitm.ac.in/scope அறிவியல் ஒலிம்பியாட் சிறப்பு மாணவர் சேர்க்கைக்கான தொலைநோக்குப் பார்வை குறித்து எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “உலகின் மிகப் பெரிய புதிர்கள் பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்வதன் மூலம் தீர்க்கப்படுவதில்லை. மாறாக அவற்றை துண்டுதுண்டாகப் பிரித்து, எதிர்கால சந்ததியினருக்கு புதிய அதிசயங்களை உருவாக்கத் துணிபவர்களால்தான் தீர்க்கப்படுகின்றன. இந்தக் கண்ணோட்டத்தோடு, அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள் பெரிதும் விரும்பும் இளநிலைப் படிப்புகளில் சேர்க்கையை வழங்குவதன் மூலம் ஐஐடி மெட்ராஸ் புதியதொரு பயணத்தைத் தொடங்குகிறது” எனக்குறிப்பிட்டார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.இந்தநிலையில், கரூர்...
"பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் பதிவு செய்யப்பட்ட அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு அவர்களின் வயதான காலத்தில் மாதாந்திர ஓய்வூதியத்தை உறுதி செய்வதாக உள்ளது .முறைசாரா துறையில்...
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றிய வெளியிட்டுள்ளார்.அதில்,உலகெங்கும் உள்ள அய்யா வைகுண்டர் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அய்யா வைகுண்டரின் அவதார விழாவுக்கு,...