Get real time update about this post category directly on your device, subscribe now.
தி.மு.க. அறிவிப்பை நம்பி மேட்டூர் தாலுகாவில் மூன்று மாதங்களில் கூட்டாக வாழ்ந்த குடும்பத்தினர் 3600 பேர் பிரிந்து தனி குடித்தனம் சென்று விட்டனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல்...
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து அங்குள்ள மக்கள் வெளிநாட்டிற்கு தப்பி ஓட அங்குள்ள விமான நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்...
மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற வன்முறைகளை சிபிஐ வி சாரித்து 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது....
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குகளிலிருந்து தப்பிவிட்டார்” என்ற செய்தி உண்மையில்லை. ஒரே ஒரு 420 வழக்கில் ‘சமரசம்’ என்ற பெயரில் வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது....
தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில், பா.ஜ.க சார்பில் வானதி சீனிவாசன் பேசினார். உரையை துவக்குவதற்கு முன் ''நான் பேசுகையில், அமைச்சர்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலோ,...
ஹசராக்கள் தலிபான்களை பழி தீர்ப்பார்கள் -ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் சுமார் 15...
தமிழக சட்டசபையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக தனது பேச்சினை துவங்கிய பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவரும் கோவை...
போலந்தில் உள்ள ரோக்லாவில் 2021 ஆகஸ்ட் 9 முதல் 15 வரை நடைபெற்ற சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை இந்தியா வென்றது. எட்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஐந்து வெண்கலம் என சர்வதேச இளைஞர் வில் வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தம் 15 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பதக்கங்களை வென்ற ஐந்து இளம் வீரர்கள், 2021 செப்டம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்கா-உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள சீனியர் அணியின் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கேடட் மற்றும் ஜூனியர் ரீகர்வ் மகளிர் சர்வதேச சாம்பியன் பட்டத்தை தீபிகா குமாரிக்கு பிறகு இரண்டாவது இந்தியராக கோமாலிக்கா பாரி வென்றுள்ளார். இரண்டு புதிய சர்வதேச இளைஞர் சாதனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பதக்கம் வென்றவர்களுக்கு புதுதில்லியில் நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் பேசிய இந்திய வில்வித்தை சங்கத்தின் தலைவரும் பழங்குடியினர் நலன் அமைச்சருமான திரு அர்ஜுன் முண்டா,உங்கள் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் அனைவரின் கடின உழைப்பும், மன உறுதியும், தியாகமும் இந்த மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. நாளைய சாதனைக்கான தொடக்கமாக இன்றைய வெற்றி இருக்கட்டும்," என்று அவர் கூறினார்.
தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான திரு ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல், செப்டம்பர் 13-ஆம் தேதி (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகும். செப்டம்பர் 1-ஆம் தேதி (புதன்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 3 (வெள்ளிக்கிழமை) ஆகும். தேர்தலின்போது ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: 1. தேர்தல் சம்பந்தமான பணிகளின் போது அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். 2. தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் அரங்கம்/அறை/ வளாகத்தின் நுழைவாயிலில்: • உடல்வெப்ப நிலை பரிசோதிக்கும் கருவிகள் மூலம் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். • அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினிகள் இடம்பெற வேண்டும். 3. மாநில அரசு மற்றும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கொவிட்-19 வழிகாட்டுதல்களின்படி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். 4. இந்தத் தேர்தல், கொவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரியை நியமிக்குமாறு தமிழகத்தின் தலைமைச் செயலாளருக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் பாரதீய ஜனதா தலைவரை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) சுட்டுக்கொலை, இது ஒரு வாரத்தில் இரண்டாவது சம்பவம். ஜாவேத் அஹ்மத் தார் பயங்கரவாத...
